அபுதாபியில் இலங்கை பெண்ணொருவரும் மேலும் 5 பேரும் உயிரிழப்பு
2021 ஆம் ஆண்டு சுற்றுலா விசாவில் அபுதாபிக்கு தொழிலுக்காக சென்ற இளம் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
அபுதாபியிலுள்ள இலங்கை தூதரகம் அடையாளத்தை உறுதிப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் காமினி செனரத் கூறினார்.
இதேவேளை, மலேசியாவில் வீட்டுப் பணிப் பெண்ணாக பணிபுரிந்த இலங்கைப் பெண் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மலேசியாவிலுள்ள உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஊடாக தகவல்களை பெற்றுக்கொள்வதாக பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதுவரையில் அவ்வாறான மரணம் தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
42 வயதுடைய திருமணமான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்ததாக கொபேய்கனே பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதமளவில் அவர் வீட்டு பணிப்பெண் தொழிலுக்கு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
Post a Comment