Header Ads



500 கிலோ அதி சக்திவாய்ந்த குண்டு மீட்பு


தாக்குதல் விமானத்தின் ஊடாக பூமிக்கு கொட்டப்பட்ட சுமார் 500 கிலோகிராம் நிறையுடைய அதிசக்திவாய்ந்த விமானக் குண்டொன்று, கிளிநொச்சி தர்மபுரம், மயில்வானகம் காட்டுப்பகுதியில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.


யுத்தக்காலத்தில் பயங்கரவாதிகளை இலக்குவைத்து கிபீர் விமானத்தால் கீழே கொட்டப்பட்ட வெடிக்காத குண்டே இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.


பிரதேசவாசியினால் தர்மபுரம் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே இந்த சக்திவாய்ந்த குண்டு கண்டறியப்பட்டள்ளது.


3 அடி நீளமும், 3 அடி சுற்றுவட்டமும் கொண்ட இந்த குண்டு, இன்றைக்கு 15 வருடங்களுக்கு முன்னர் பூமியை நோக்கி கொட்டப்பட்டுள்ளது. இரும்புக்கரல் பிடித்துள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.