Header Ads



50 வைத்தியர்கள் கருப்புப் பட்டியலில் சேர்ப்பு - சத்திரசிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட்டதால் பதற்றம்


முன்னறிவிப்பின்றி வெளிநாடு சென்ற 50 வைத்தியர்களை கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் வைத்தியர் பிரியந்த அத்தபத்து தெரிவித்துள்ளார்.


இதேவேளை பலாங்கொடை வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை நிபுணர்கள் இன்மையால் சத்திரசிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட்டதால் நேற்று பதற்றமான சூழல் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.


ஆறு வைத்தியர்கள் கடமையாற்றியிருந்த போதிலும் நேற்று இரண்டு வைத்தியர்கள் மாத்திரமே கடமையாற்றியிருந்தமையினால் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.


மறு அறிவிப்பு வரும் வரை மருத்துவமனையில் அவசர அறுவை சிகிச்சைகள் மாத்திரமே மேற்கொள்ளப்படும் என மருத்துவமனையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.