நாட்டில் 4 வகையான தொற்று நோய்கள் அதிகரிப்பு
இன்புளூவென்சா, டெங்கு, வயிற்றுப்போக்கு மற்றும் எலிக்காய்ச்சல் ஆகிய தொற்றுநோய்கள் பிரதானமாக காணப்படுகின்றன.
இன்புளூவென்சா தொற்றைக் கட்டுப்படுத்த வீடுகளிலும் முகக்கவசத்தை அணிய வேண்டும் என கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் தீபால் பெரேரா கூறுகின்றார்.
ஆரோக்கியமான உணவுகளை உண்பதன் மூலம் வயிற்றுப்போக்கு தொற்றை தவிர்க்க முடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, எலிக்காய்ச்சல் தொற்றுக்குள்ளானவர்கள் பதிவாகும் வீதம் அதிகரித்துள்ளதாக சுகாதார தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2 ஆயிரத்து 600 பேர் எலிக்காய்ச்சல் தொற்றுக்குள்ளாகியிருப்பதாக தொற்றுநோய் ஆய்வுப் பிரிவின் பொதுசுகாதார நிபுணர் டொக்டர் துஷாணி தாபரே தெரிவித்துள்ளார்.
எலிக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் ஏற்படின் உடனடியாக அருகிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் அல்லது பொது சுகாதார பரிசோதகரை தொடர்புகொண்டு அறிவிக்குமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நேற்று(05) 13 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Post a Comment