கனடா - அமெரிக்க எல்லையில் 4 இந்தியர்கள் சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட வழக்கில் திருப்பம்
ஜனவரி மாதம் 19 ஆம் திகதி குஜராத்திலுள்ள Dingucha என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் (Jagdish 35), அவரது மனைவி வைஷாலி (Vaishali 33), தம்பதியரின் பிள்ளைகளான விஹாங்கி (Vihanngi 12) மற்றும் தார்மிக் (Dharmik 3) ஆகியோர் கனடா அமெரிக்க எல்லையில் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டிருந்தனர்.
அமெரிக்காவுக்குச் செல்லும் கனவில், கனடா எல்லையில் பனியில் உறைந்து உயிரிழந்த இந்த குடும்பம் தொடர்பில் தற்போது சில விபரங்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு உயிரிழந்தவர்களை அமெரிக்காவுக்கு கடத்தும் பின்னணியில் செயற்பட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று பேரை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர்களில் கனேடியர்கள் இருவரை இந்தியாவுக்குக் கொண்டு வந்து விசாரிக்க இந்திய பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, கனடாவில் வாழும் Fenil Patel மற்றும் Bitta Singh என்னும் இருவரை விசாரணைக்குட்படுத்த விரும்புவதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கனேடியர்களான இருவரையும் இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை இந்திய அதிகாரிகள் ஆரம்பித்துள்ளதுடன்,குறித்த விடயம் இரு நாடுகளுக்கிடையிலான இரகசிய விடயம் என்று அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
மேலும் சந்தேகநபர்கள் கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் இந்திய புலம்பெயர்வோரைக் கடத்தும் ஒரு கும்பலுடன் தொடர்புடையவர்கள் எனவும் அமெரிக்க பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
Post a Comment