Header Ads



ஜனாஸாக்கள் எரிப்பு - ஒட்டுமொத்த முஸ்லிம்களும் செய்ய வேண்டிய 4 முக்கிய பணிகள்


*ஜனாஸா எரிப்புக்கு கூறும் ஏற்க முடியாத காரணம்*


கொவிட் 19 தொற்­றினால் மர­ணித்­த­வர்­களின் சட­லங்­களை அடக்கம் செய்ய முடி­யாது; எரிக்­கவே முடியும் எனும் அறி­வு­பூர்­வ­மற்ற கொள்­கையை நடை­மு­றைப்­ப­டுத்­திய ஒரே நாடு இலங்­கையே என்­பதை உல­கமே அறியும். இந் நிலையில் இந்தக் கொள்­கையை நடை­மு­றைப்­ப­டுத்­து­மாறு நிபு­ணர்கள் என்­ற­ழைக்­கப்­படும் சிலர் தம்மை தவ­றாக வழி­ந­டாத்­தி­ய­தாக சுகா­தார அமைச்சர் கெஹ­லிய ரம்­புக்­வெல்ல பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்த கருத்து தற்­போது பல­ரதும் கவ­னத்தை ஈர்த்­துள்­ளது.


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம் கடந்த வாரம் இது தொடர்பில் சபையில் கேள்­வி­யெ­ழுப்­பி­யி­ருந்தார். அதற்கு பதி­ல­ளித்த சுகா­தார அமைச்சர், குறித்த நிபுணர் குழுவில் அங்கம் வகித்த பேரா­சி­ரியர் மெத்­திகா விதா­னகே என்­ப­வரே இக் கொள்­கையை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என்­பதில் விடாப்­பி­டி­யாக இருந்­த­தாவும் அவர் அர­சாங்­கத்தை தவ­றாக வழி­ந­டாத்­தி­யுள்­ளதை தற்­போது தாம் உணர்­வ­தா­கவும் குறிப்­பிட்­டி­ருந்தார். உண்­மையில் அமைச்­சரின் இந்த பதில் சிறு பிள்­ளைத்­த­ன­மா­ன­தாகும்.


சட­லங்­களை கட்­டாய தகனம் செய்யும் தீர்­மா­ன­மா­னது இலங்­கைக்கு சர்­வ­தேச அளவில் பாரிய தலை­கு­னிவை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. குறிப்­பாக 57 முஸ்லிம் நாடு­களை இலங்கை பகைத்துக் கொள்ள வேண்டி ஏற்­பட்­டது. மேலும் பல சர்­வ­தேச மனித உரிமை அமைப்­பு­களின் கோபத்தைச் சம்­பா­திக்க வேண்­டி­யி­ருந்­தது. உள்­நாட்டில் இதற்கு எதி­ராக குரல் கொடுக்­கா­த­வர்­களே இல்லை என்ற அள­வுக்கு இவ்­வி­வ­காரம் எதிர்ப்பைச் சம்­பா­தித்­தி­ருந்­தது. அமைச்­ச­ர­வைக்குள் கூட இந்த விவ­காரம் பிள­வு­களை ஏற்­ப­டுத்­தி­யது. இவ்­வா­றான எதிர்ப்­புகள் இருக்­கத்­தக்­க­தாக, ஒரே ஒரு நிபு­ணரின் நிலைப்­பாட்டை மதித்து இந்த கட்­டாய தகனக் கொள்­கையை நடை­மு­றைப்­ப­டுத்­தினோம் என அமைச்சர் கூறு­வது வேடிக்­கை­யா­ன­தாகும்.


உலக சுகா­தார நிறு­வனம் கொவிட் 19 இனால் மர­ணிப்­ப­வர்­களை அடக்கம் செய்ய முடியும் என அனு­மதி வழங்­கிய நிலை­யிலும் உலகின் 180 க்கும் மேற்­பட்ட நாடு­களில் இவ் வைரஸ் தொற்­றினால் மர­ணிப்­ப­வர்கள் அடக்கம் செய்­யப்­பட்ட நிலை­யிலும் ‘எரிக்க மட்­டுமே முடியும்’ என இலங்­கையில் எடுக்­கப்­பட்ட தீர்­மானம் முழுக்க முழுக்க அர­சியல் பின்­னணி கொண்­டது என்­பது வெளிப்­படை உண்­மை­யாகும். சுகா­தார அமைச்சின் நிபு­ணர்­களின் வழி­காட்­ட­லி­லேயே இத் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது என ஜனா­தி­பதி முதல் அரச அதி­கா­ரிகள் வரை இதற்கு வியாக்­கி­யானம் கூறி­னாலும் அதில் எந்­த­வித உண்­மையும் இல்லை என்­பது பின்­னாட்­களில் வெட்ட வெளிச்­ச­மா­கி­யது.


அப்­போ­தைய சுகா­தார அமைச்சர் பவித்ரா வன்­னி­யா­ராச்சி நிய­மித்த குழு­வுக்கு மேல­தி­க­மாக கொவிட் கட்­டுப்­பாடு தொடர்­பான அப்­போ­தைய இரா­ஜாங்க அமைச்சர் சுதர்­ஷினி பெர்­ணான்டோ புள்ளே, 11 பேர் கொண்ட நிபுணர் குழு­வொன்றை நிய­மித்­தி­ருந்தார். குறித்த குழுவில் திற­மை­வாய்ந்த வைரஸ் தொடர்­பான நிபு­ணர்கள் அங்கம் வகித்­தனர். இவர்கள் சட­லங்­களை அடக்கம் செய்ய முடியும் என அனு­மதி வழங்­கி­யி­ருந்­த­துடன் இதன் மூலம் நீர் மாச­டை­வ­தற்­கான எந்­த­வித ஆதா­ரங்­களும் இல்லை என்றும் குறிப்­பிட்­டி­ருந்­தனர். இதற்கு மேல­தி­க­மாக புகழ்­பெற்ற தொற்­று­நோ­யியல் நிபுணர் பேரா­சி­ரியர் மலிக் பீரிஸ் போன்­ற­வர்கள் கூட நிலத்­தடி நீரினால் ஒரு­போதும் வைரஸ் பர­வாது எனத் தெளி­வாகக் குறிப்­பிட்­டி­ருந்­தனர். எனினும் இவற்­றையும் முன்னாள் ஜனா­தி­பதி கோட்­ட­பாய தலை­மை­யி­லான அர­சா­ஙகம் கருத்­தி­லெ­டுக்­க­வில்லை. இந் நிலையில் இன்று யாரோ ஒரு சிலர் தம்மை தவ­றாக வழி­ந­டாத்­தி­விட்­டனர் என இல­கு­வாகக் கூறித் தப்பி விட அனு­ம­திக்க முடி­யாது.


என­வேதான் இந்த விவ­கா­ரத்தை முஸ்லிம் சமூ­கமும் ஏனைய மனித உரிமை அமைப்­பு­களும் தீவி­ர­மாக கவ­னத்­திற்­குட்­ப­டுத்த வேண்டும். 


இந்த தவ­றான தீர்­மா­னத்­திற்­க­மைய எரிக்­கப்­பட்­ட­வர்­க­ளதும், ஓட்­ட­மா­வ­டியில் அடக்கம் செய்யப்பட்டவர்களதும் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கருதி அடிப்படை உரிமை வழக்குகள் தொடரப்பட வேண்டும். 


பாரிய தொகை நஷ்டயீடு கோரப்பட்ட வேண்டும். சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிக்குமாறும், 


பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டயீடு வழங்குமாறும் அரசாங்கத்திற்கு அழுத்தம் வழங்க வேண்டும். 


இந்தக் கோரிக்கைகள் சமூகத்தின் சகல மட்டங்களிலிருந்தும் முன்வைக்கப்பட வேண்டும்


என வலியுறுத்த விரும்புகிறோம்.

- Vidivelli -

1 comment:

  1. எரித்தவர்களின் குடும்பங்களுக்கு பாரிய நஷ்டஈட்டு தொகையை அரசு கொடுக்க வேண்டும் அதோடு இதட்கு சம்பந்தம் உடையவர்களுக்கு தண்டனையும் கொடுக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.