3 யானைகள் விவகாரம் - நீதிமன்றத்தில் வழக்கு
வனவிலங்கு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் எச்.பி ரத்னாயக்க மற்றும் விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகமான அநுர சில்வா ஆகியோரை சந்தேகநபர்களாக பெயரிட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
யானை தொடர்பான வழக்கொன்றில் குற்றவாளியாக அறிவித்து தண்டனை வழங்கப்பட்ட ஒருவருக்கு, நீதிமன்றத்தினால் அரசுடமையாக்கப்பட்ட 3 யானைகளை முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய, கையளித்தமை குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, பொலிஸ் விஷேட விசாரணை பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டீ.எஸ் விக்ரமசிங்க, விசாரணை அறிக்கையின் முன்னேற்றத்தை சமர்ப்பித்தார்.
குறித்த 3 யானைகளும் அமரபுர பீடத்தின் முன்னாள் மகாநாயக்கர் திவுல்தென ஞானீஸ்வர தேரருக்கும் கொள்ளுப்பிட்டி பொல்வத்த விகாரையின் பரம்பரைக்கும் வழங்க வேண்டியவை என அவர் அதில் குறிப்பிட்டார்.
இதற்கமைய, வனவிலங்கு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் எச்.பி ரத்னாயக்க மற்றும் விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகமான அநுர சில்வா ஆகியோர் தவறிழைதுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திடம் அவர் தெரிவித்தார்.
இந்த விடயங்களை ஆராய்ந்த கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே, குறித்த இருவரையும் சந்தேகநபர்களாக பெயரிட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறுபொலிஸ் விஷேட விசாரணை பிரிவிற்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த மைதிரி செய்தவை அனைத்தும் மகடி, மங்கொள்ளை, களவு மாத்திரம் தான். இந்த அரச உயர் அதிகாரிகளை சட்டத்துக்கு முரணாக கட்டளையிட்டு அவற்றை நிறைவேற்றவைத்து இறுதியில் அனைவரையும் சிக்கலில் மாட்டிவைத்து இறுதியில் மை3 நல்லபிள்ளை. இவனுடைய தலைவலி நீங்க ஏற்கனவே நீதிமன்றத்தில் குற்றவாளியாக்கப்பட்டு 10 கோடி நட்டஈடு கட்டினாலும் இல்லாவிட்டாலும் இவனைப்பிடித்து சிறையில் தள்ளிவிட்டால் அது மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக அமையும். இறுதியில் மஹிந்தவுடன் சேர்ந்து நல்லமுறையில் கேம் அடிக்கவும் கற்றுக் கொண்டுள்ளார் எனவும் பரவலாக கதைக்கப்படுகின்றது.
ReplyDelete