குவைத்திலிருந்து 32 இலங்கைப் பெண்கள் நாடு கடத்தப்பட்டனர்
இந்தநிலையில் குறித்த 32 பெண்களும் இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
ஒப்பந்தம் செய்யப்பட்ட பணியிடத்தையோ அல்லது வீட்டையோ விட்டு வெளியேறி குவைத் நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் பணிபுரியும்போது, தூதரகத்திற்கு வந்து தாங்களாகவே இலங்கை செல்வதற்காகப் பதிவு செய்த இலங்கைப் பெண்களின் குழுவே இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு அனுப்பப்பட்ட பெண்கள் அனுராதபுரம், வவுனியா, கம்பஹா, கிண்ணியா, கொழும்பு, குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த பெண்கள் 250 குவைத் தினாருக்கும் அதிக சம்பளம் பெறுவதற்கு, சட்டவிரோத உறவுகள் அல்லது தங்கள் தனிப்பட்ட சுதந்திரத்திற்காக தங்கள் பணியிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். குவைத்தில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள், பொலிஸார் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினருடன் கலந்துரையாடி, தலையிட்டு தற்காலிக விமான அனுமதியின் கீழ், இவர்களை இலங்கைக்கு அழைத்து வர ஏற்பாடு செய்ததாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment