Header Ads



இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 31 கோடி பெறுமதியான அம்பர்கிரிஸ் பிடிபட்டது


தமிழகம் தூத்துக்குடி கடலோரப் பகுதியிலிருந்து 31.67 கோடி இந்திய ரூபா மதிப்புள்ள 18.1 கிலோ அம்பர்கிரிஸ் என்ற விந்தணு திமிங்கலங்களின் விளைபொருளை தமிழக வருவாய் புலனாய்வு இயக்குனரகம் மீட்டுள்ளது.


தூத்துக்குடி துறைமுக கடற்கரையில் இருந்து கடல் வழியாக குறித்த அம்பர்கிரிஸ்ஸை இலங்கைக்கு கடத்த ஒரு குழு முயற்சிப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கேளரா மற்றும் தமிழகத்தை சேர்ந்த 4 பேரை கைது செய்தனர்


இதன்போது, வாகனத்தின் முன் இருக்கையில் இருந்து 18.1 கிலோ அம்பர்கிரிஸ். கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டது.

அம்பர்கிரீஸ் என்ற மெழுகுப்பொருள், இந்தியாவின் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் பாதுகாக்கப்பட்ட பொருளாகும்.


இந்தநிலையில் பொலிஸாரால் அம்பர்கிரிஸ் கைப்பற்றப்பட்ட சம்பவம் விந்தணு திமிங்கலங்கள் வேட்டையாடப்பட்டனவா? என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை கடந்த இரண்டு ஆண்டுகளில் மாத்திரம் 54 கோடி இந்திய ரூபா மதிப்புள்ள அம்பர்கிரிஸ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.