Header Ads



அரசியல் குண்டர்ககளினால் தாக்கப்பட்ட ஓமான் வர்த்தகர், நாட்டிலிருந்து வெளியேற தீர்மானம் - 300 இலங்கையர் வேலையிழப்பர்


கட்டானாவின் ஹல்பே பகுதியில் உள்ள முதலீட்டுச் சபையில் பதிவுசெய்யப்பட்ட ஆடைத் தொழிற்சாலையின் முகாமைத்துவப் பணிப்பாளர், மார்ச் மாதம் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொழிற்சாலையை மூடிவிட்டு இலங்கையை விட்டு வெளியேற தீர்மானித்துள்ளார்.


ஐந்து பேர் கொண்ட குழு ஒன்று தொழிற்சாலை வளாகத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்து ஆரம்பத்தில் கடமையில் இருந்த பாதுகாப்பு அதிகாரியைத் தாக்கிய பின்னர் அவர்கள் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள அவரது வீட்டில் ஓமன் நாட்டவரான அப்பேரல் தொழிற்சாலை நிர்வாக இயக்குநரை தாக்கியுள்ளனர்.


கம்பஹா மாவட்டத்தில் அரசியல்வாதி ஒருவரின் ஆதரவுடன் செயற்பட்டதாகக் கூறப்படும் கும்பல் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஓமான் வர்த்தகர் இலங்கைக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்தார். புகழ்பெற்ற ஓமானி ஆடைத் தொடரின் சகோதர நிறுவனமான அவரது ஆடைத் தொழிற்சாலையில் 300க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் பணிபுரிகின்றனர்.


இந்த சம்பவம் தொடர்பில் ஓமானிய வர்த்தகர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக சிலோன் டுடே தெரிவித்துள்ளது.


தாக்குதல் தொடர்பில் இதுவரை நியாயமான விசாரணையை நடத்த இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.


இதனால் தொழிற்சாலையை மூடிவிட்டு இலங்கையை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை என ஓமானிய பிரஜை மேலும் தெரிவித்துள்ளார்


No comments

Powered by Blogger.