விபத்தில் மரணமான 2 பெண்கள் தொடர்பில் வெளியான தகவல்
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் பெண்கள் இருவர் உயிரிழந்தனர்.
அவர்களின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. ஊர்காவற்துறை வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் பயணித்த இரு பெண்களே உயிரிழந்துள்ளனர்.
கோப்பாய் பகுதியை சேர்ந்த நவநீதராசா நிலக்சனா (வயது 26) மற்றும் மானிப்பாய் பகுதியை சேர்ந்த கீதாரட்ணம் திவ்யா (வயது 31) ஆகிய இருவரே உயிரிழந்துள்ளனர்.
காரில் பயணித்த வடமராட்சி புலோலியை சேர்ந்தவர்களான சிவசுப்பிரமணியம் சுதாகரன் மற்றும் கருணாமூர்த்தி விமலா தேவி ஆகிய இருவரும் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment