Call வந்த போது மின்னல் தாக்கி, 2 பேர் உயிரிழப்பு
மொனராகலை, கொணகங்கார பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரத்தரங்கன்ன பிரதேசத்தில் வயல்வெளியில் வேலைச்செய்துக்கொண்டிருந்த இருவரே பலியாகியுள்ளனர்.
அம்புலன்ஸ் சாரதி (வயது 32), திருமணம் முடிக்காத இளைஞன் (வயது 31) ஆகியோரே கடந்த 27ஆம் திகதியன்று பலியாகியுள்ளனர்.
வயல்வெளியில் வேலைச் செய்துக்கொண்டிருந்த போது கடுமையான மழை பெய்தமையால், அங்குள்ள வாடியில் இருவரும் அமர்ந்திருந்துள்ளனர். அதில் ஒருவரின் அலைபேசிக்கு அழைப்பு வந்துள்ளது. அதற்கு பதிலளிக்கும் போதே கடுமையான மின்னல் வெட்டியுள்ளது. அதன் பின்னரே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
அவ்விருவரும் இருந்த வாடி தீப்பற்றி எறிவதை கண்ட, சாரதியின் தாய், கூக்குரல் எழுப்பியுள்ளார். அதன்பின்னர், கிராமவாசிகள் இணைந்து வாடிக்குச் சென்றுள்ளனர். எனினும், அவ்விருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
சுமணசிறி குணதிலக்க
Post a Comment