Header Ads



முஸ்லிம் நாட்டை உதாரணம் காட்டும் ரஞ்சன் - 2 வருடத்தில் செய்யப்போகும் காரியம்


- Ismathul Rahuman -

நடைமுறையிலுள்ள எனது ஒத்திவைக்கப்பட்ட சிறைதண்டனை இன்னும் இரண்டு வருடங்களில் முடிவடைந்தவுடன் மீண்டும் செயல்பாட்டு அரசியலில் ஈடுபடுவதாக முன்னால் இராஜாங்க அமைச்சர் ரன்ஜன் ராமநாயக்க வெளிநாடுகளின் பயணத்தை முடித்துக்கொண்டு வெள்ளிக்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையம் வந்திறங்கிய போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது கூறினார்.


   அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,


    எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் நஷ்டஈட்டின் மூலம் எமக்கு தலைதூக்க முடிந்திருக்கும்.


  சுனாமி மற்றும் கோரோனா மூலம் கிடைத்த நன்கொடைகளினால் நாடென்ற முறையில் எழுந்துநிற்க இருந்த சந்தர்ப்பம் சிலர் தனிப்பட்ட நலனுக்காக பொக்கட்டில் போட்டுக்கொண்டதனால் தவிர்க்கப்பட்டது.


  எனக்கு எல்லோருடைய "பெட்டிகிரி"யும் தெரியும். நான் எல்லோரையும் அனுசரித்தேன். அதனால்தான் நான்   அவர்கள் எல்லோரும் கள்வர்கள், நண்பர்கள் என  பகிரங்கமாக தெரிவித்தேன்.


 அதனால் 14 டிரிலியன் கடனாகி நாடு இந்த நிலமைக்கு  ஆளாகி வங்குரோத்தானது 74 வருடங்கள் இவர்கள் செய்த களவாகும்.

 

பாலைவனமான டுபாய் நாட்டை 50 வருடங்களாக ஆட்சி செய்த அரச தலைவர்கள் எவ்வளவு முன்னேற்றியுள்ளார்கள்.


  கடல்களை நிரப்பி,காடுகளை வளர்த்து சகல மரகறிகளையும் உற்பத்தி செய்து நெல்லும் பயிரிடுகின்றனர். இன்னும் சில காலத்தில் எமக்கு அரிசியும் அனுப்புவார்கள். அந்த நாட்டு தலைவர்கள் சிந்தனையுள்ளவர்கள் நாட்டின் மீது அன்பு கொண்ட வர்கள்.


    ரணில் விகரமசிங்க ஜனாதபதி எரிபொருள்,கேஸ் போலி இல்லாமலாக்கி நாட்டை ஒரு நிலமைக்கு  கொண்டு வந்துள்ளார். அது மகிழ்ச்சிக்குரியது. அனால் அவர்  ஊழல் மோசடிக்கு எதிராகப் போராடுவதாக தெரியவில்லை. 


 கப்பம்காரர்கள் முதலீட்டாலர்களை அடித்து விரட்டுகின்றனர். மத்திய வங்கியை கொள்ளையிட்ட அவரின் நண்பரை இலங்கைக்கு அழைத்துவரவில்லை.


 நான் சிங்கபூர், டுபாய், அபுதாபி நாடுகளில் நடாத்திய கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அங்குள்ள அன்பர்கள் அன்பளிப்புச் செய்த டெப் கனணிகளை கொண்டு வந்துள்ளேன். அதனை எந்த வேறுபாடுமின்றி கூடிய புள்ளிகளைப் பெற்ற பிள்ளைகளுக்கு இலவசமாக வழங்குவேன் என்றார்.

No comments

Powered by Blogger.