Header Ads



ஒரே பார்வையில் 29 ரமழான் கேள்விகள் - விடைகளை அனுப்பி பரிசுகளை வெல்லுங்கள்

 
Ramadan 01

1. முகம்மத்  நபி (ஸல்) அவர்களுக்கு எங்கே எவ்விடத்திலிருந்து எப்போது எத்தனை வருடங்கள் வஹி இறக்கி அருளப்பட்டது. அல் குர் ஆன் வசனத்துடன் விடை தருக ?

2. ஹதீஸ் கலை  அறிஞர்களிடத்தில் அபாதிலா என்று பட்டம் சூட்டப்பட்ட நான்கு நபித்  தோழர்களும் யாவர்?

3. நபி (ஸல் ) அவர்களின் முதல் மற்றும் கடைசி மனைவியரின்  பெயர்களைக் குறிப்பிடுக?

4. சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றியத்தின் தற்போதைய தலைவர் யார்?

5. நபி (ஸல்) அவர்கள் மனிதர்களில் சிறந்தவர் என்று யாரைக் குறிப்பிட்டார்கள் ? 


Ramadan 02

1. அல் குர்ஆனிலுள்ள  இரு சூராக்களின் ஆரம்பமும் முடிவும் ஒரே வார்த்தையைக் கொண்டு முடிவடைகிறது. அவ்விரு சூராக்களின் பெயர்களையும் குறிப்பிடுக?

2. நபித்தோழர்களின் ஹதீஸ் அறிவிப்பை ஏற்பதில் அவர்களின் நிலை என்ன?

3. உலக பெண்களின் தலைவி என பட்டம் சூட்டப்பட்ட ஸஹாபி பெண்மணி யார்?

4. அல்-பிறூனி மற்றும் இப்னு சீனாவின் கண்டு பிடிப்புக்கள் இவ்விரண்டு தருக?

5. நபி (ஸல்) அவர்கள் இந்த சமூகத்திடம் தனக்காக வேண்டிய இரு கோரிக்கைகளையும் குறிப்பிடுக?


Ramadan 03

1. அல் குர்ஆனில் உள்ள பத்து வசனங்கள் தஜ்ஜாலிடமிருந்து மனிதனை பாதுகாக்கும் அவை யாவை?  சூராவின் பெயர் என்ன?

2. ஹதீஸ் கலையில் முகள்ரமூன் என்போர் யார்?

3. உலக முஸ்லிம் லீக்கின் தற்போதைய செயலாளர் நாயகத்தின் பெயரை க் குறிப்பிடுக?

4. தனக்கு ஆண்  குழந்தை  வேண்டுமென மூன்று நாட்கள் நோன்பு நோற்ற  நபி யார் ?

5. ஏன் இலங்கை வாழ் முஸ்லிம்கள் அரபு மொழியைக்  கற்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை?


Ramadan 04

1. அல் குர்ஆனில் ‘மதர்’ என்ற வார்த்தை வேதனை என்ற கருத்தில் வந்துள்ளது ஒரு இடத்தில் மாத்திரம் மழை  என்ற கருத்தில் வந்துள்ளது அவ்வசனம் யாது?

2. ஹதீஸ் கலையில் அறிவிப்பாளர் வரிசையின்  (இஸ்னாத்) முக்கியத்துவம்  பற்றி அப்துல்லா பின் அல் முபாறக் அவர்கள் கூறியுள்ளது  என்ன  ? 

3. ‘குப்பத்து சஹ்ரா’ என்பது என்ன ? அது எங்கே உள்ளது ? அதன் சிறப்பம்சம் யாது?

4. மத்திய ஆசியாவில் காணப்படும் முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் மூன்றைக் குறிப்பிடுக?

5. நபி (ஸல்) அவர்கள் சுவர்க்கத்தில் ஒரு  மனிதர் இருப்பதைக் கண்டதாக கூறிவிட்டு அதற்கான காரணத்தையும் குறிப்பிட்டார்கள்.  குறித்த காரணத்தைக் குறிப்பிடுக ?


Ramadan 05

1. அல் குர்ஆனில் கூறப்படும் ‘அல் அஹ்பார்’ , ‘அல் ருஹ்பான்’  என்பவர்கள் யாவர்?

2. “ஜாஹிலியாவின் மக்கள் செய்த மூன்று விடயங்கள் உள்ளன, அவற்றை இஸ்லாத்தில் உள்ளவர்களும்  விட்டு விடுவதில்லை” என்று  நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.   அம்மூன்று விடயங்களையும் குறிப்பிடுக?

3. நபி (ஸல் ) அவர்களின்  நுபுவ்வத்துக்கு முன்னர் அவர்களை நபியாக ஏற்றுக்கொண்ட மனிதரின் பெயர் என்ன?

4. சவுதி அரேபியாவினால்  ஆரம்பிக்கப்படவுள்ள  புதிய விமான சேவையின் பெயரைக் குறிப்பிடுக?

5. இமாம் இப்னுல் கையிம் (ரஹ்) அவர்கள் தனது நூல் ஒன்றில் முன்னுரிமைகள் பற்றி எழுதியுள்ளார்கள். அந்நூலின் பெயர் என்ன?   


Ramadan 06

1. இறைவனால் பெயர் சூட்டப்பட்ட நபிமார்கள் யாவர்?

2. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “மூன்று விடயங்கள் வெளியில் வந்தால்,  முன் நம்பிக்கை கொள்ளாத அல்லது நம்பிக்கை கொண்டு அதன் மூலம் நன்மையை ஈட்டாத எந்த ஒரு ஆன்மாவுக்கும் பலன் கிடைக்காது.”  ஹதீஸில் கூறப்பட்டுள்ள அம்மூன்று விடயங்களும்  யாவை?

3. மக்கா, மதீனா , ஷாம் ஆகிய பகுதிகளில் இறுதியாக மரணித்த நபித் தோழர்களின் பெயர்களும் அவர்கள் மரணித்த  ஹிஜ்ரி ஆண்டையும் குறிப்பிடுக?

4. ‘முகாப்' என்று அழைக்கப்படும் பிரமாண்ட கட்டிடம் எந்த நாட்டில் கட்டப்படவுள்ளது ? அக்கட்டிடத்தின் வடிவம் ,உயரம், மற்றும் நீளம், அகலம் என்பவற்றை குறிப்பிடுக ?

5. நாம் ஏன் நோன்பு நோற்கிறோம்?  


Ramadan 07

1. உஸ்மான் (ரழி) அவர்களால் பல பிரதிகளாக குர்ஆன் தொகுக்கப்படுவதற்காக அமைக்கப்பட்ட குழுவில் இடம் பெற்றவர்கள் யாவர்?

2. அல்  ஹதீஸ் அல் முத்ரஜ்  என்றால்  என்ன?

3. தாயிப் நகருக்கும் மக்காவுக்கும் நபி  (ஸல் ) அவர்கள் ஹிஜ்ரத்  சென்ற போது  உடன் சென்ற நபித்தோழர் யார்?

4. அண்மையில்  துருக்கி - சிரிய நாடுகளில்  நிலநடுக்கம்  ஏற்பட்டு பாரிய உயிர், பொருள் சேதங்கள் ஏற்பட்டன.  நிலநடுக்கம் ஏற்பட்ட  திகதியையும் அதன் ரிக்டர் அளவையும்  குறிப்பிடுக?

5. கோபம் வரும் போது என்ன சொல்ல வேண்டும் என்று நபியவர்கள் கற்றுத்தந்துள்ளார்கள்?


Ramadan 08

1. அல்லாஹ்வுக்கு இணை வைப்பவர்களை திருமணம் செய்வது குறித்து குர்ஆன் கூறும் அறிவுரை என்ன ? 

2. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு ஷஹீதுக்கு இறைவனிடத்தில் ஆறு விடயங்கள்  உள்ளன. அவை யாவை?

3. நபி (ஸல்) அவர்களின் தந்தையுடன் பிறந்த ஆண்கள் எத்தனை பேர்?

4. இலங்கை அரசாங்கத்தால் குடிமக்களுக்காக வழங்கப்படும் கௌரவங்களில் மிகவும் உயர்ந்த மதிப்புடைய தேசிய கௌரவ விருதின் பெயர் என்ன?

5. ஒரு நபித் தோழரது பெயரைக்  குறிப்பிட்ட நபிகளார் (ஸல்) அவர்கள் "அவரைப் போன்று உங்களுக்கு இருக்க முடியாதா?" என்று கேட்டார்கள். குறித்த அந்த சஹாபியின் பெயர் என்ன?  


Ramadan 09

1. அல்லாஹ்விடத்தில் உயர்ந்த அந்தஸ்துடையவர்கள் யார் என அல் குர்ஆன் கூறுகிறது? அது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள வசனத்தைக் குறிப்பிடுக?

2. நபி (ஸல்) அவர்களின் பெற்றோர்கள் இறந்த பின்னர் அவர்களை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர்கள் யார்?

3. வாழ்நாள் அதிகரிக்கப்படவும்,  உணவு விஸ்தீரிக்கப்படவும் விரும்புகிறவர்கள் என்ன செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? 

4. செயற்கை நுண்ணறிவின் கண்டுபிடிப்புக்கு காப்புரிமை வழங்கிய உலகின் முதல் நாடு எது?

5. நோன்பின் நிபந்தனைகளாக நபி (ஸல்) அவர்கள் கூறியவை எவை?


Ramadan 10 

1. நபி ஈஸா (அலை) அவர்கள் செய்ததாக இறைவன் குறிப்பிடும் அற்புதங்கள் யாவை?

2. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் மூன்று விடயங்ககளில் விளையாடுவது கூடாது. அவை  யாவை ?

3. மார்க்க தீர்ப்புகளை அதிகம் வழங்கிய நபி தோழர்கள் ஏழு பேரின் பெயர்களை குறிப்பிடுக?

4. அரபுலகில் எந்த நாட்டில்  முதல் அணு உலை தொடங்கப்பட்டுள்ளது?.

5. நபி (ஸல்) அவர்களிடம் இளம் சஹாபாக்கள் எத்தனை நாட்கள் தங்கியிருந்து  ஆன்மீக பயிற்சி பெற்றார்கள்?


Ramadan 11.


1. பனீ இஸ்ராஈல் என யாரை அல் குர்ஆன் குறிப்பிடுகிறது.

2. ஒரு நோன்பாளிக்கு  காது, மூக்கு வழியாக மருந்து செலுத்துவதன் சட்டம் யாது? காரணத்துடன் விடை தருக.

3. அல் ஹவாரிய்யூன் என்பவர்கள் யார்?  

4. இலங்கையில் தற்போது நடைமுறையில் இருக்கும் தனியார் சட்டங்களைக் குறிப்பிடுக.

5. ஒரு மனிதனது பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படாமைக்கு நபியவர்கள் கூறிய காரணங்கள் இரண்டினைக் குறிப்பிடுக


Ramadan 12

1. “மனிதன் அமானிதத்தை சுமந்துள்ளான்” என்ற அல் குர்ஆன் வசனத்தில் வரும் "அமானிதம்" என்ற சொல் குறிப்பது என்ன?

2. ஒரு மனிதன் பொய் உரைப்பதற்கு நபி (ஸல் ) அவர்கள் அனுமதித்த சந்தர்ப்பங்கள் என்ன? இது தொடர்பாக உம்மு குல்தூம் (ரழி ) அவர்கள் அறிவித்த ஹதீஸ் யாது?

3. “எனது உருவத்திலும் குணத்திலும் எனக்கு நீ ஒப்பாகி விட்டாய்”  என நபி (ஸல்) அவர்கள் ஒரு தோழரை பார்த்து கூறினார்கள் அந்த நபித் தோழர் யார்? அவருக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் இடையிலுள்ள உறவு முறை யாது?

4. இலங்கையில் காணப்படும் மொத்த காழி நீதி மன்றங்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடுக?

5. அயலவர்களுக்கான எல்லையாக ஆயிஷா (ரழி) அவர்கள் எத்தனை வீடுகளைக் குறிப்பிட்டார்கள்?


Ramadan 13

1. நபி இத்ரீஸ் அலை அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய பொறுமையாளர், உண்மையாளர், உயர் அந்தஸ்துடையவர் ஆகிய பண்புகளைக் குறிக்கும் அல் குர்ஆன் வசனங்கள் யாவை?


2. “இவ்வுலகில் ஓடும் இரு நதிகளின் ஊற்றுக்கண் சுவனமாகும்” அவ்விரு நதிகளும் எவை? ஹதீஸ் ஆதாரத்துடன் குறிப்பிடுக. 

3. நபி (ஸல் ) அவர்களினால் ஏழைகளின் தந்தை என பெயர் சூட்டப்பட்ட அந்த நபித் தோழர் யார்?

4. 1956 இல் நிறைவேற்றப்பட்டு 07-11-1956 இல் நடைமுறைக்கு வந்த முஸ்லிம் பள்ளிவாசல் தர்ம நம்பிக்கை நிதியம் சட்டம் கொண்டு வரப்படுவதற்கு முக்கியமான காரணமாக இருந்தவர் யார்?

5. நோய் விசாரிக்கச் செல்பவருக்காக ஆயிரக்கணக்கான வானவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்,  அவ் எண்ணிக்கையைக் குறிப்பிடுக


Ramadan 14


1. தலாக் சொல்லப்பட்ட பெண்கள் மூன்று துப்பரவுகளை எதிர்பார்ப்பர் என்ற அல் குர்ஆன் வசனம் எந்த நபித் தோழியுடன் தொடர்பு பட்டது?

2. “நபியே! அல்லாஹ் உமக்கு அனுமதித்ததை நீர் ஏன் தடை செய்கிறீர்?” என்ற அல் குர்ஆன் வசனம் இறங்கியதற்கான  காரணியை அறிவிக்கும் ஹதீஸைத் தருக

3. பிஷிர் பின் அல் பறா  பின் மஹ்ரூர்  என்ற நபித் தோழரின் மரணம் பற்றி சுருக்கமாக தருக

4. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 1981ஆம்  ஆண்டிற்கு முன்னர் என்ன பெயரில் இயங்கி வந்தது?

5. நோன்பாளியின் இரு சந்தோசங்களும் எவை?


Ramadan 15

1. “முன்ஞியா”  என அழைக்கப்படும் சூரா எது அதற்கான காரணியைக் குறிப்பிடுக.

2. “ஹஜருல் அஸ்வத்” கல்லின் நிறம் தொடர்பாக வந்துள்ள ஹதீஸைக் குறிப்பிடுக.

3. ஈராக்கில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் ஒரு ஸஹாபி கொல்லப்பட்டார். குறித்த அந்த ஸஹாபியின் பெயர், எப்போது கொல்லப்பட்டார் , அப்பள்ளிவாசலின் பெயர் என்பவற்றைக் குறிப்பிடு.

4. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளரின் பெயரையும் கடைசியாக அவர் வகித்த அரச உயர் பதவியையும் குறிப்பிடுக.

5. நோன்பு நோற்பது உடல் ஆரோக்கியத்தை ஏற்படுத்தக் கூடியதாகும்.  என்றாலும் எமது தவறான பல்வேறு பழக்க வழக்கங்களினால் நோன்பின் ஆரோக்கியம் தடுக்கப்படுவதாக அமைகிறது. அப்படிப்பட்ட பழக்கவழக்கங்கள் மூன்றைக் குறிப்பிடுக.


Ramadan 16

1. அல் குர்ஆனிலுள்ள ஒரு சூராவை தொழுகையில் ஓதாமல் தொழுகை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.  குறித்த அந்த சூரா எது? அதனுடைய வேறு பெயர்கள் இரண்டினைக் குறிப்பிடுக.

2. ஹதீஸ் மக்தூஹ் ,   ஹதீஸ் மவ்கூப்  என்றால் என்ன?

3. பக்தாதில் அப்பாஸிய கலீபா மஹ்மூன் அவர்களால் உருவாக்கப்பட்ட  பைத்துல் ஹிக்மாவின் முக்கியத்துவம் பற்றி சுருக்கமாகத் தருக.

4. 18 ஆம் நூற்றாண்டில், கண்டிய மன்னன் யாரை கர்நாடக அரசரிடம் தூதுவராக அனுப்பினான்.

5. அல்லாஹ்வுக்கு விருப்பமான இரண்டு அமல்களை  ஹதீஸின் நிழலில் குறிப்பிடவும்


Ramadan 17

1. சுலைமான் அலை அவர்களுடைய படையணியில் சேர்ந்த இனத்தவர்கள் யாவர்?

2. தல்ஹா பின் உபைதுல்லா என்ற ஸஹாபி ஷஹீதாக்கப்படுவார்கள் என்பதை நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு கூறினார்கள்.

3. நபி (ஸல் ) அவர்களுடன்  செய்த உடன்படிக்கையை மீறிய முதல் யூத பழங்குடியினரின் பெயர் என்ன?

4. இலங்கை - அரேபிய தொண்மை உறவை அறிந்து கொள்ள துணை புரியும் இரண்டு அம்சங்களைக் குறிப்பிடுக.

5. நபி (ஸல்) அவர்கள் முஃமின்கள் விடயத்தில் அதிக கரிசனை கொண்டவர்களாக இருந்தார்கள் என்பதை அடையாளப் படுத்திய அல் குர்ஆன் அத்தியாயமும் வசனமும் எது?


Ramadan 18

1. அல் குர்ஆனில் கூறப்பட்டுள்ள “அல் வஅத்”  மற்றும் “அல் வஈத்”  என்ற இரு வார்த்தைகளுக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தைக் குறிப்பிடவும்.

2. “யா அல்லாஹ்! அவரை நான் பொருந்திக் கொண்டேன் நீயும் அவரை பொருந்திக்  கொள்வாயாக” என நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்த நபித் தோழர் யார்? எச்சந்தர்ப்பத்தில் இப் பிரார்த்தனை செய்தார்கள்.

3. ஷீமா பின்த் அல் ஹாரித் அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்களுக்குமான உறவு முறை யாது?

4. இலங்கையில் சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்ளும் நோக்கத்துடன் செயற்பட்ட முக்கிய அமைப்பாக இலங்கை தேசிய காங்கிரசைக் குறிப்பிடலாம்,  இவ்வமைப்பிற்கு 1925ஆம் ஆண்டு போட்டியின்றி உப தலைவராக  தெரிவு செய்யப்பட முஸ்லிம் தலைவர் யார்?

5. செல்வந்தர்கள் மூலம் ஒரு ஊரே அழிக்கப்படும் எனக் கூறும் அல்குர்ஆன் வசனத்தைக் குறிப்பிடுக.


Ramadan 19

1. “மேலும் அவர்களுக்கிடையில் அல்லாஹ் இறக்கியருளியதைக் கொண்டு தீர்ப்பு வழங்குவீராக!” என்ற அல் குர்ஆன் வசனம் எந்த கோத்திரத்தினரை முன்னிலைப்படுத்தி இறக்கப்பட்டது.

2. “அவ்விரண்டு கால்களும்  மறுமை நாளில் உஹதை விட தராசில் கனமாக இருக்கும்” என நபி (ஸல்) அவர்கள் எந்த நபித் தோழருக்காக எச்சந்தர்ப்பத்தில் கூறினார்கள்.

3. இரு நபித் தோழர்கள் நபி (ஸல்) அவர்களுடன் பேசிவிட்டு, இருளில் வெளியேறிச் சென்ற போது அவர்களிடம் இருந்த தடியிலிருந்து ஒளி வீசியது. அவ்விரு நபித் தோழர்களும் யார்?

4. 2000 ஆண்டுகளாக அரேபியர் இலங்கையில் குடியிருப்பதால் வேடர் மற்றும் ஏனைய பழங்குடிகள் போன்று முஸ்லிம்களும் பழங்குடிகளே என்று கூறிய அகழ்வாராய்ச்சியாளர் யார்?

5. அல் குர்ஆன் கூறும் முஃமின்களின் பண்புகளில் இரண்டினை சுருக்கமாகக் கூறுக.  


Ramadan 20

1. உமர் (ரழி ) அவர்களுடைய மூன்று கருத்துக்களுக்கு  அமைவாக மூன்று  அல் குர்ஆன் வசனங்கள் இறங்கின.  குறித்த அவ்வசனங்களைக் குறிப்பிடுக.

2. ஹாதப் பின் அபீ பல்தஆ அவர்கள் சாரா என்ற பெண்மணியிடம் மக்காவிலுள்ள குறைஷிகளுக்கு கொடுத்தனுப்பிய கடிதத்தில் எழுதப்பட்டிருந்த செய்தி என்ன?

3. இரு ஹிஜ்ரத்தை  உடையவர்கள் என்ற பெயர் பெற்ற  நபித் தோழிகள் ஐவரின் பெயர்களைக் குறிப்பிட்டு அப்பெயர் கூறப்படுவதற்கான காரணத்தையும் குறிப்பிடுக.

4. நவீன இஸ்லாமிய முன்னோடிகளில் ஒருவரான இமாம் பதீஉஸ் ஸமான் ஸஈத் நூர்சி பற்றி சுருக்கமாக குறிப்பிடுக.

5. சமூக எழுச்சிக்கு பங்களிப்புச் செய்யும் பிரதான இரு பண்புகளும் எவை?


Ramadan 21

1. அல் குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடு எது? எத்தனை  இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது ?

2. “அல்லாஹ்வின் தூதெரே  அல்லாஹ்வின்மீது ஆணையாக இந்த நொண்டிக் காலால் சுவனத்தில் கால் பதிக்க விரும்புகிறேன்.” இவ்வசனத்தைக் கூறிய நபித் தோழர் யார் ?

3. அப்துல்லாஹ் பின் ஸலாம்  எனும் ஸஹாபியை பற்றி சுருக்கமாக தருக.

4. இலங்கை முஸ்லீம்களது வரலாறு தொடர்பில் 20,21ம் நூற்றாண்டு காலப்பகுதிகளில் எழுதப்பட்ட இரண்டு நூல்களைத் தருக.

5. தொழுகையை நீட்டித் தொழுவித்த  நபித்தோழர் ஒருவரை நபியவர்கள் கண்டித்து, அவ்வாறு செய்ய வேண்டாம் என்று உபதேசம் செய்தார்கள். அந்த நபித் தோழர் யார்?


Ramadan 22

1. “உங்களில் இரு பிரிவினர் தோல்வியடைய நினைத்த போது”  இவ்வசனத்தில் கூறப்படும் இரு பிரிவினர்கள் யாவர்?

2. நல்ல நண்பனுக்கு நபி (ஸல் ) அவர்கள் யாரை உதாரணம் காட்டினார்கள்.

3. அம்ரு பின் அல்  ஜமூஹ் அவர்கள் வணங்கி வந்த விக்கிரகத்தின் பெயர் என்ன? அது எதனால் செய்யப்பட்டது.?

4. முஸ்லீம்களால்  முதலில் வெளியிடப்பட்ட வரலாற்று நூல் எது?

5. கல்விக்கு பெரிதும் உதவியாக இருக்கும் உறுப்புக்கள் என அல் குர்ஆன் எந்தெந்த உறுப்புக்களைக் கூறுகிறது.


Ramadan 23

1. திருக்குர்ஆன் ஓதுவதை  செவிமடுப்பதற்காக   வானவர்கள் ஒரு நபித் தோழரை நெருங்கி வந்தனர்.  அந்த நபித்தோழர்  யார்?

2. ஹதீஸ்களை ஒன்று திரட்டும்படி கட்டளை பிறப்பித்த  கலீபாவின் பெயரென்ன? அவர்  எந்த ஆட்சிக் காலத்தைச்  சேர்ந்தவர் ?

3. நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்குள் பிரவேசித்ததும் பனு நளீர் கோத்திரத்துடன் செய்து  கொண்ட உடன் படிக்கை யாது?  

4. சோதனையொன்று ஏற்படும் போது அதனை மூன்று காரணங்களின் அடிப்படையில் நோக்க முடியும். அவை எவை?

5. முகலாய மன்னர்களால் இந்தியாவிற்கு செய்யபட்ட சேவைகள் மூன்றைக்  குறிப்பிடுக.


Ramadan 24

1. எந்த சூராவை ஓதினால் அவ்வீட்டில் ஷைத்தான் நுழைய மாட்டான்?

2. அல் முபாரக் பூரி அவர்கள் ஜாமிஉ அத் திர்மிதி என்ற ஹதீஸ் கிரந்தத்திற்கு விளக்கவுரை எழுதிய நூலின் பெயரென்ன ?

3. அல் உஸ்ஸா என்ற விக்கிரகத்தை உடைத்த நபித் தோழரின் பெயரென்ன ?

4. இலங்கையில் பிரபலாமாக அறியப்படும் முஸ்லிம் கட்டிட கலைஞர் யார்?

5. போதைப் பொருள் முற்றாகவே தடை செய்யப்பட்டுள்ளது என்பதை அறிவித்த அல் குர்ஆன் அத்தியாயமும் வசனமும் எது?


Ramadan 25

1. அல் குர்ஆன் வசனம் இறக்கப்பட்ட முதல் பள்ளிவாசலையும் குறித்த வசனத்தையும் குறிப்பிடுக.

2. ‘நுஸ்ஹதுல் முத்தகீன்’  என்ற   ஹதீஸ் கிரந்தம் எந்த ஹதீஸ் கிரந்தத்திற்கு விளக்கவுரை என்பதைக் குறிப்பிடுக.

3. பத்ஹு மக்கா தினத்தன்று  கஅபாவின் சாவியை நபிகளாரிடம் கொடுத்தவரின் பெயர் என்ன?

4. முஸ்லீம் நாடுகளில் அதிக மொத்த தேசிய உற்பத்தியை (GDP) கொண்ட நாடு எது?

5. நபி இப்ராஹீம் அலை அவர்களும் நபி இஸ்மாஈல் அலை அவர்களும் கஃபாவை புனர்நிர்மாணம் செய்து விட்டு கேட்ட பிரார்த்தனையை அரபியில் தருக


Ramadan 26

1. அல்-குர்ஆன் வசனத்திற்கு மாத்திரம் ஏன் “ஆயத்” என்று பெயர் கூறப்படுகிறது?

2. “இரு விடயங்கள் ஒருவரிடம் இருந்தால் அவனை நன்றி உள்ளவன் என்றும், பொறுமை உள்ளவன் என்றும் இறைவன் குறித்துக் கொள்வான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அவ்விரு விடயங்களும் எவை?

3. நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்து இறை தியானத்தில் ஈடுபட்டிருந்த ஹிரா குகையின் அளவு என்ன?

4. இலங்கையினது சுதந்திரத்துக்காய்  போராடிய முஸ்லீம்கள் மூவரது பெயரைக் குறிப்பிடுக

5. ஸன்ஆ,ஹழ்ர மவ்த் என்ற இரு இடங்களை தொடர்பு படுத்தி நபியவர்கள் கூறிய நன்மாராயம் என்ன?


Ramadan 27

1. அல்-குர்ஆனை ஒலிபெருக்கியில்  ஓதி தொழுகை  நடாத்தக் கூடாது என்பதற்கான ஆதாரத்தை அல் குர்ஆனிலிருந்து குறிப்பிடுக

2. எல்லா வற்றையும் விட சிறந்த செல்வங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியவை எவை?

3. “நீ புகலிடம் கொடுத்தவர்களுக்கு நாங்களும் புகலிடம் கொடுத்து விட்டோம் நீ பாதுகாப்பு வழங்கியவர்களுக்கு  நாமும் பாதுகாப்பு வழங்கி விட்டோம்” என நபி (ஸல்) அவர்கள் யாரிடம் எந்த யுத்தத்தின் போது கூறினார்கள்? 

4. இலங்கையில் அதிக முஸ்லிம் சனத் தொகையைக் கொண்ட மாவட்டம் எது?

5. சுவர்க்கமும் நரகமும் எதனால் மூடப்பட்டுள்ளது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


Ramadan 28

1. ஹுனைன் யுத்தத்தின்போது மதீனாவாசிகளை “அஸ்ஹாபுல் பகரா”  என்று அழைக்கப்பட்டதுக்கான காரணி யாது?

2. அஷ் ஷிஃபா பின்த் அப்துல்லா அல்-அதவியா அவர்கள் எறும்புக்  கடிக்குச்  செய்த சிகிச்சை முறை  யாது?

3. எகிப்து நாட்டு முகவ்கிஸ் அரசன்   நபி (ஸல் ) அவர்களுக்கு கொடுக்கும்படி அன்பளிப்பாக வழங்கிய பொருட்கள் யாவை ?

4. இலங்கையில் முதலாவது சிறுவர் ஆய்வு மாநாடு நடைபெற்ற வருடம் எது?

5. அன்னை கதீஜா (ரழி) அவர்களுடைய பெற்றோர்களின் பெயர் என்ன?


Ramadan 29

1. சூரதுல் ஹுமசா உமய்யா பின் கலஃப் உடைய விடயத்தில் இறங்கியதற்கான காரணி யாது ?

2. ஹதீஸ் கலை அறிஞர் இமாம் சுஃப்யான் பின் உயய்னா அவர்களும், இமாம் தஹபீ அவர்களும்   அம்ரா பின்த் அப்துல் ரஹ்மான் அவர்ஹளைப் பற்றி கூறியது என்ன?

3. மாரியதுல் கிப்தியா  ரலியல்லாஹு அன்ஹா அவர்களை பற்றி ஆயிஷா   ரலியல்லாஹு அன்ஹா கூறிய வார்த்தை என்ன?

4. பரீட்சை இல்லாத நாடு என்று  எந்த நாடு அழைக்கப்படுகிறது?

5. நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையை  எங்கு தொழுதார்கள்?


No comments

Powered by Blogger.