Header Ads



24 வயது பேரன், பாட்டிக்கு செய்த கொடூரம்


களுத்துறை  மாவட்டத்தில்  தனது பாட்டியின் கழுத்தை கத்தியால் அறுத்து  சடலத்தை காட்டுக்குள் வீசிய 24 வயதுடைய பேரனைக் கைது செய்துள்ளதாக பதுரலிய பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பவத்தில்  களுத்துறை மாவட்டத்தில் பொல்லுன்ன, பதுரலிய ஹடிகல்லவைச் சேர்ந்த  57 வயதுடைய  லீலாவதி விக்கிரமசிங்க என்ற பெண்ணே   படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


தனது பேத்தியார் சுகயீனமுற்றவர் என்பதாலும், அவரது சிகிச்சைக்காக பணம் செலவழிக்கப்பட்டதாலும்  பேரன் இந்த கொடூரத்தை    செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


உயிர்ழந்த பெண் சுகயீனமுற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில், கொலைசெய்யப்படுவதற்கு முன் வீடு திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.