அடுத்த 24 மணித்தியாலங்களில், மிகவும் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை
இன்று (14) காலை முதல் நில்வலா ஆற்றுப் பகுதியின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் கணிசமான மழை பெய்து வருவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக, அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் கொட்டபொல, பிடபெத்தர, அக்குரஸ்ஸ, அத்துரலிய, மாலிம்பட, திஹகொட, மாத்தறை மற்றும் தெவினுவர பிரதேச செயலகப் பிரிவுகளின் தாழ்நிலப் பிரதேசங்களில் கணிசமான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர் மட்டப் பகுப்பாய்வின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், குறுக்கு வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment