Header Ads



தமிழகத்தில் இலங்கையருக்கு 22 வருடங்கள் சிறை


13 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் தமிழகத்தில் உள்ள இலங்கையர் ஒருவருக்கு 22 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.


மண்டபத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வந்த இலங்கையருக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


வழக்கின் படி, குற்றம் சாட்டப்பட்ட 52 வயதான குறித்த இலங்கையர், 2022இல் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.


இதேவேளை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.