Header Ads



2 பேரை கடத்திச் சென்ற 6 நபர்களை சுற்றிவளைத்து பிடித்த STF


பெண் ஒருவரையும் ஆண் ஒருவரையும் கடத்திச் சென்றுகொண்டிருந்த 6 பேரை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். 


தெமட்டகொடையில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


அவர்கள் பயணித்த முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. 


கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு 9, 10 -ஐ சேர்ந்த 22 முதல் 28 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டது. 


வத்தளை - ஹெந்தல, அடம்பொலவத்த பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரும், மாகொலையை சேர்ந்த ஆண் ஒருவருமே கடத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

No comments

Powered by Blogger.