170 இலட்சம் ரூபா தங்கத்தை கடத்திவந்த 3 பேர் கைது
- Ismathul Rahuman -
170 இலட்சம் ரூபா பெறுமதியான 7 கிலோகிராம் 604 கிராம் தங்கத்தை கடத்தி வந்த இரு பெண்கள் உட்பட மூவரை போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்த இரு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
தகவல் ஒன்றுக்கு அமைய விமான நிலையத்தின் வெளியேறும் பகுதியில் வைத்து இவர்களை பரிசோதித்தபோது, 7ம் திகதி அதிகாலை 2.30 சென்னையில் இருந்து வந்த AI 273 இலக்க விமானத்தில் வந்திறங்கிய சிலாபம், உடப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 54, 43 வயதினரையுடைய இரு பெண்களில் ஒருவரிடம் 200 கிராம் நிறையுடைய 22 கரட் தங்க ஆபரனங்களும் மற்றய பெண்ணிடம் 408 கிராம் தங்க நகைகளும் கைபற்றப்பட்டன.
காலை 9.25மணிக்கு டுபாயிலிருந்து FZ 547 இலக்க விமானத்தில் வந்த கொழும்பு, மரதானை பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயது வர்தகரை பரிசோதித்து போது அவரின் வயிற்றுப் பகுதியில் கட்டி மறைத்திருந்த 6 கிலோகிராம் 996 கிராம் தங்க பிஸ்கட் மற்றும் நகைகள் கைபற்றப்பட்டன. இவற்றின் தற்போதைய சந்தை பெறுமதி 170 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களை சுங்க விசாரணைகளுக்காக முன்னிலை படுத்தவுளளன.
Post a Comment