Header Ads



17 இலட்சம் அரச ஊழியர்கள் அவசியமா..?


நாட்டில் 17 இலட்சம் அரச ஊழியர்கள் உள்ளதாகவும், வரி செலுத்துவோரின் மொத்த வருமானத்தில் 76% இந்த 17 இலட்சம் பேரை பராமரிப்பதற்கே செலவிடப்படுவதாக முன்னாள் நிதி அமைச்சரான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, 


17 இலட்சம் அரச ஊழியர்களை பராமரிப்பதற்காக வருடாந்தம் செலவிடப்படும் 1.4 இலட்சம் கோடி ரூபாவுடன் ஒப்பிடுகையில், அவர்களால் நாட்டுக்கும் மக்களுக்கும் உண்மையான நன்மை கிடைக்குமா என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.


ஒரு வருடத்தில் 104 டிரில்லியன் ரூபா செலவாகும் என்றும், இலங்கை மின்சார சபை, பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை விமானம் மற்றும் வலையமைப்புக் கொள்வனவுச் சபை என்பன கடந்த நான்கு வருடங்களில் 1350 பில்லியன் ரூபா நட்டத்தைச் சந்தித்துள்ளதாகவும் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 


இந்த பணத்தை சேமித்திருந்தால் 12 இலட்சம் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் எனவும், நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் 178,000 ரூபாவை சேமித்திருப்பார்கள் எனவும் முன்னாள் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். 


1 comment:

  1. இந்தியாவில் 1400 கோடி மக்களுக்கு இந்தியாவின் அரச ஊழியர்கள் தொகை 11 இலட்சம், பாகிஸ்தானில் 230 மில்லியன் மக்கள் தொகைக்கு அந்த நாட்டின் அரச ஊழியர்கள் 8 இலட்சம் இலங்கையில் வெறும் 220
    17 இலட்சம் அரச ஊழியர்கள் இருந்தால் இந்த நாடு எப்படி உருப்படியாகும். மஹிந்த ஆட்சிக்கு வரமுன்பு இருந்த அரச ஊழியர்கள் 5 இலட்சம் மாத்திரம் தான். வீதியிலும் மூலைமுடுக்குகளிலும் அலைந்து திருந்த அவருடைய கல்வித்தரமுடைய அல்லது நாமலின் கல்வித்தரத்தையுடைய நபர்களுக்கு வௌிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரங்களுக்கு சேவைக்காக அனுப்பப்பட்டனர். அவர்களின் ஆங்கிலம், அரபு உற்பட பிரான்ஸிய மொழி, யப்பான், கொரிய மொழிகளில் பணியாற்ற எதிர்பார்க்கப்பட்ட போது அவர்களின் தாய் மொழிகளில் கூட பணியாற்ற தகுதியில்லை. அவர்களில் ஒருவர் சிங்களத்தில் கடிதம் எழுதினால் அவற்றை நாம் பலமுறை திருத்தி வேறு மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை. உதாரணமாக மத்திய கிழக்கில் முக்கியமான நாட்டில் செக்குரிடி பணியாற்ற நாலுபேர் அனுப்பப்பட்டனர். அவர்களின் வேலை, ஒருவர் வௌியிலிருந்து கதவைத் திறப்பார். அடுத்தவர் அந்த கதவை மூடுவார். அவர்கள் அவசியமில்லை எனக்கூற அந்த நாட்டில் பணியாற்றும் இலங்கைத் தூதுவருக்கு முதுகெழும்பில் சக்தியில்லை. இதுதான் மஹிந்த விரிவாக்கிய அரச சேவை.

    ReplyDelete

Powered by Blogger.