Header Ads



15 வயது மாணவியின் நிர்வாணப் படங்களை கோரிய மதப் போதகர்


பாடசாலை மாணவி ஒருவரின் நிர்வாண புகைப்படங்களை பெற முயற்சித்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மதப் போதகரை தலா 5 இலட்சம் ரூபா  பெறுமதி 2 சரீரப் பிணைகளில் செல்ல நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


இது தொடர்பான வழக்கு நேற்று (8) நீர்கொழும்பு மேலதிக நீதவான் தர்ஷிமா பிரேமரத்ன முன்னிலையில் அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


15 வயது பாடசாலை மாணவி காவல்நிலையத்தில் செய்த முறைப்பாட்டில், வட்ஸ்அப் மூலம் தன்னை தொடர்புகொண்டு குறித்த போதகர் நிர்வாண புகைப்படங்களை  கோரியதாக கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.