தாராபுரம் மண்ணின் முதலாவது பெண்கள் அரபுக் கல்லூரியான ரூஹானிய்யாவில் 13 ஆலிமாக்கள் பட்டம் பெற்றனர்
மன்னார், தாராபுரம் ரூஹானிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா, சனிக்கிழமை (29) தாராபுரம், அல்-மினா மகா வித்தியாலய கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
அரபுக்கல்லூரியின் அதிபர்களான இல்ஹாம், சஹ்துல்லாஹ் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டதுடன், விஷேட பேச்சாளராக அல்-ஹாபிழ் அல்-பாழில் றிஸ்வி (இஹ்யாயீ) கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
தாராபுரம் மண்ணின் முதலாவது பெண்கள் அரபுக் கல்லூரியான ரூஹானிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியிலிருந்து, முதன் முறையாக 13 ஆலிமாக்கள் பட்டம் பெற்று வெளியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment