Header Ads



ஊருக்குள் புகுந்த 11 சிங்கங்களை சுட்டு கொன்ற மக்கள்


கென்யாவில் வறட்சியை முன்னிட்டு ஊருக்குள் புகுந்த சிங்கங்கள் மற்றும் மனிதர்கள் இடையேயான மோதல் சமீப காலத்தில் அதிகரித்து உள்ளது. கஜியாடு கவுன்டி, ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் கிளிமஞ்சாரோ என்ற மலை பிரசித்தி பெற்றது. இதன் அருகே கஜியாடு கவுன்டி பகுதிக்கு உட்பட்ட அம்போசெலி உயிர்சூழல் பகுதி அமைந்து உள்ளது. இது யுனெஸ்கோ அமைப்பால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 


கென்யாவின் தென்பகுதியில் அமைந்த இந்த பகுதியில் வசித்து வந்த 11 சிங்கங்கள் வரை கடந்த வாரத்தில் கொல்லப்பட்டு உள்ளன. அவற்றில் 6 சிங்கங்கள் கடந்த சனிக்கிழமை கொல்லப்பட்டு உள்ளன என அந்நாட்டு வனத்துறை தெரிவிக்கின்றது.


இது முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக அதிக எண்ணிக்கை ஆகும் என அந்த துறையின் செய்தி தொடர்பாளர் சி.என்.என்.னுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இந்த வார தொடக்கத்தில் ஆப்பிரிக்காவின் மிக வயது முதிர்ந்த சிங்கங்களில் ஒன்றான லூன்கிட்டோ (வயது 19), பாதுகாக்கப்பட்ட பகுதியை விட்டு வெளியே வந்து உள்ளது. 


 அதிக பசியாக இருந்த அந்த சிங்கம், கால்நடை பகுதிகளுக்குள் புகுந்து உள்ளது. இதனை கவனித்த உரிமையாளர் அதனை சுட்டு கொன்றுள்ளார் என கார்டியன்ஸ் என்ற சிங்கங்களின் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்து உள்ளது. 


40 ஆண்டுகளில் இல்லாத வகையில் வறட்சியின் பிடியில் சிக்கி கென்யா தவித்து வருகிறது. இதனால், விலங்குகள் இடையே இயற்கையான முறையில் வேட்டையாடுவதில் சிரமம் காணப்படுகிறது. மறுபுறம் பல விலங்குகளை பறிகொடுத்த கால்நடை உரிமையாளர்களும், அதிக எச்சரிக்கையுடன் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மனித, சிங்க மோதல் ஏற்பட்டு வருகிறது. 


கடந்த சனிக்கிழமை கொல்லப்பட்ட 6 சிங்கங்கள் அன்றைய தினம் 11 ஆடுகள் மற்றும் ஒரு நாயை கொன்றுள்ளன. இந்த சம்பவம் எதிரொலியாக, உள்ளூர்வாசிகளை அழைத்து அரசு பிரதிநிதிகள் கூட்டம் ஒன்றை நடத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளனர். இதில், மனித மற்றும் வனவிலங்கு மோதலை தவிர்க்கும் வகையிலான ஆலோசனைகள், மனித சமூகத்தினர் முன்பே எச்சரிக்கை அடையும் வகையிலான சாதனங்களை அமைப்பது, மோதல்களை குறைப்பது உள்ளிட்டவை பற்றி விவாதிக்கப்பட்டன.


No comments

Powered by Blogger.