Header Ads



10 லட்சம் தந்த பின்பே தாம்பத்யம், ரூ.5 லட்சம் வாங்கியும் ஹனிமூனில் 'அமைதி' காத்த சைக்கோ கணவர்


உத்தர பிரதேசத்தின் பிலிபித் நகரை சேர்ந்த நபருக்கும் படான் நகரை சேர்ந்த பெண்ணுக்கும் இடையே கடந்த பிப்ரவரி 6-ந்தேதி திருமணம் நடந்து முடிந்தது. இந்த திருமணத்திற்கு செலவாக மணமகள் வீட்டார் ரூ.20 லட்சம் செலவழித்து உள்ளனர். இந்த நிலையில், ரூ.10 லட்சம் பணம் தந்த பின்னரே தாம்பத்ய உறவு இருக்கும் என புதிதாக கட்டிய மனைவியிடம் கணவர் கூறியுள்ளார்.


இதனால், முதல் நாள் இரவிலேயே மனைவி அதிர்ச்சி அடைந்து உள்ளார். இந்த நிலை, அடுத்த 3 மாதங்களுக்கும் தொடர்ந்து உள்ளது. பொறுமையிழந்த மனைவி தனது வீட்டுக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.


இதனால், அவரது தாயார் மருமகனிடம் தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு இதுபற்றி கேட்டு உள்ளார். பாலியல் பிரச்சனைகள் எதுவும் இருந்தால் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறேன் என மருமகனிடம் கூறியுள்ளார்.


ஆனால், ரூ.10 லட்சம் பணம் தரவேண்டும். அதன்பின்பே ஹனிமூனுக்கு செல்வேன் என அந்த நபர் அடம் பிடித்து உள்ளார். இதன்பின்பு மணமகள் வீட்டாரிடம் இருந்து, ரூ.5 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது.


இதனை மருமகன் பெற்று கொண்ட பின்னர், அந்த ஜோடி நைனிடாலுக்கு ஹனிமூன் சென்று உள்ளது. ஆனால், அப்போதும் அவர்களிடையே தாம்பத்ய உறவு எதுவும் நடக்கவில்லை. அந்த நபர் மனைவியின் ஆபாச புகைப்படம் ஒன்றை எடுத்து வைத்து கொண்டு மீதி தொகையை கேட்டு மிரட்டி உள்ளார். இல்லையெனில் அதனை வைரலாக்கி விடுவேன் என்றும் கூறி சைக்கோ போன்று, அச்சுறுத்தி உள்ளார். இதனால், மிரண்டு போன அந்த பெண், தனது வீட்டில் நடந்தவற்றை கூறி அழுது உள்ளார். இதன்பின் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. அவர்கள் இதுபற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


No comments

Powered by Blogger.