Header Ads



SJB க்கு புதுச் சிக்கல், தடையும் போட்டது நீதிமன்றம்


அமைச்சர்கள் மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னான்டோவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐக்கிய மக்கள் சக்திக்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.


ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் தவிசாளர் சரத் பொன்சேகாவுக்கே நுகேகொட மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு விதித்துள்ளது.


2023 ஏப்ரல் 18 ஆம் திகதி வரை இந்த தடை உத்தரவு செல்லுபடியாகுமென அமைச்சர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்தார்.


கொழும்பு மாவட்ட நீதிமன்றில் நிவாரணம் கோரி ரஞ்சித் மத்தும பண்டார தாக்கல் செய்த முறைப்பாடு மற்றும் வாக்கு மூலம் மாவட்ட நீதிபதியினால் பரிசீலிக்கப்பட்ட பிரதான விடயங்களாகும்.


மத்தும பண்டாரவின் ஐக்கிய தேசியக் கட்சி அங்கத்துவம் இன்னும் செல்லுபடியாகுமென நீதிமன்றம் தெரிவித்தது.  எனவே அந்த அங்கத்துவம் செல்லுபடியாகும் பட்சத்தில் மத்தும பண்டார ஐக்கிய  மக்கள் சக்தியின் யாப்பை மீறுவதை நீதிமன்றம் அவதானித்ததாக அமைச்சர் ஹரின் பெர்னான்டோ மேலும் தெரிவித்தார்

No comments

Powered by Blogger.