O/L பரீட்சைகள் பிற்போடப்பட்டன
எதிர்வரும் மே மாதம் 15ம் திகதி நடத்தப்படவிருந்த கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகளை, குறித்த திகதியில் நடத்த முடியாதென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த பரீட்சைகளை இரண்டு வாரங்களுக்கு பிற்போட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்பிரகாரம், குறித்த பரீட்சைகளை எதிர்வரும் மே மாதம் 29ம் திகதி நடத்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
Post a Comment