Header Ads



பல மாதங்களாகி விட்டது, கண்டுகொள்ளாத ஜனாதிபதி - Mp க்கள் விரக்தி


எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்பு திகதி குறிப்பிடப்படாது தாமதமாகியுள்ளது என அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.


அதனால், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பிக்கள் சிலர், கடும் அதிருப்தியில் உள்ளனர் என அந்த தகவல் தெரிவித்துள்ளது என லங்காதீப இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.


​​அமைச்சரவை மறுசீரமைக்கப்படுமென திகதி குறிப்பிட்டு கடந்த வாரத்தில் பல்​வேறான தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனால், மொட்டுக்கட்சியினர் பலர் கடும் எதிர்ப்பார்ப்புகளுடன் இருந்தனர்.  


இந்நிலையில், அமைச்சர்களாக நியமிக்கப்படவேண்டிய மொட்டுக்கட்சியினரின் பெயர்கள் அடங்கிய பட்டியல், அந்த கட்சியின் தலைவரினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சில மாதங்களுக்கு முன்னரே அனுப்பிவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.