கனடாத் தூதுவரும், JVP யும் சந்தித்து பேசிக் கொண்ட விடயங்கள்
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான புதிய கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் மற்றும் தேசிய மக்கள் சக்தியிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (10) பிற்பகல் மவிமு தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த சந்திப்பின்போது கனடா உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அரசியல் உத்தியோகத்தர் கோபிநாத் பொன்னுத்துரை அவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இலங்கை இன்றளவில் எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் நடப்பு அரசியல் நிலைமை பற்றி இங்கு விசேடமாக கலந்துரையாடப்பட்டதோடு புதிய உயர் ஸ்தானிகர் வோல்ஸ் அவர்களின் எதிர்கால கடமைப் பணிகளுக்காக தேசிய மக்கள் சக்தியின் நல்வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டது.
Post a Comment