யாழ்ப்பாணத்தில் கொரோனா - விழிப்புடன் இருக்க Dr ஜமுனானந்தா கோரிக்கை
பருத்தித்துறையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கே கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி சி.ஜமுனானந்தா தெரிவித்துள்ளார்.
குறித்த பெண் தொடர்ச்சியாக 3 வாரங்களுக்கு மேலாகக் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து அவர், பருத்தித்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நேற்று முன்தினம் (12.04.20123) யாழ்.போதனா வைத்தியாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இப்பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதாக யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சி.ஜமுனானந்தா தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் வேறு தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர் என்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர் எனவும் கூறியுள்ளார்.
அத்துடன், குறித்த பெண் கோவிட் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டவர் எனவும் தற்போது அவர் யாழ். போதனா வைத்தியசாலை விடுதி ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
எனினும் பொதுமக்கள் தொற்றுநோய் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் பொது இடங்களில் முககவசம் அணிந்துகொள்வது அவசியம் எனவும் யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சி.ஜமுனானந்தா அறிவுறுத்தியுள்ளார்.
வைத்தியத்துறையும் விழிப்புடன் இருக்க வேண்டும். கொரோனா தொற்று நோய் குறித்த மேலதிக ஆய்வுகளைச் செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment