Header Ads



குணபாலவின் சடலத்தை நல்லடக்கம், செய்ய உதவிய இஸ்லாமியர்கள் - இலங்கையில் நெகிழ்ச்சி



இறக்காமம் ஹாஷிம் சந்தியில் நேற்று (22) சடலமாக கண்டெடுக்கப்பட்ட லியனகே குணபாலவின் சடலத்தை நல்லடக்கம் செய்ய இறக்காமம், வரிப்பத்தான்சேனை பிரதேச மக்களினால் பண உதவி செய்யப்பட்டது.


குறித்த நபரின் சடலத்தை நல்லடக்கம் செய்ய, பண வசதி இல்லையென்று today ceylon குழுவினரிடம் லியனகே குணபாலவின்  மனைவி கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.


வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட  குழுவினர் அவசரமாக செயல்பட்டு குறித்த நபரின் உடலை நல்லடக்கம் செய்ய பிரதேச மக்களிடம்  பணம் வசூலித்தார்கள், சிறுவர்கள், பொரியோர்கள் என்று பாராமல் அனைவரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து மொத்தமாக 35000 ரூபாய் பணம் வசூலித்து.

 

இறக்காமம் பிரதேச சபை கிராம உத்தியோகத்தர்களிடம்  ஒப்படைக்கப்பட்டது.


msm தமீம்

No comments

Powered by Blogger.