சிறுமியின் நெகிழ்ச்சியான செயல் - குவிகிறது பாராட்டு
ராஜாங்கனையில் பெண் ஒருவர் பெருந்தொகை பணத்துடன் தவற விடப்பட்ட பையை சிறுமி ஒருவர் கையளித்துள்ளார்.
அனுராதபுரம், சிறிமாபுர மகா வித்தியாலயத்தில் தரம் 8 இல் கல்வி கற்கும் மாணவியே இந்த செயலை செய்து பலரின் பாரட்டினை பெற்றுள்ளார்.
குறித்த சிறுமி, அருகிலுள்ள தனது நண்பியின் வீட்டில் விளையாடிவிட்டு தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது வீதியோராமாக கிடந்த கை பையை கண்டெடுத்துள்ளார்.
வெற்று பை என நினைத்த எடுத்த அந்த சிறுமிக்கு, அந்த பணப்பை சற்று கடினமாக இருப்பதால் அதை திறந்து பார்த்தபோது, அதில் பெருந்தொகை பணம் இருந்துள்ளது.
இந்நிலையில் குறித்த பணத்தை உரியவரிடம் ஒப்படைப்பதற்கு உதவுமாறு தனது நண்பியின் தாயாரிடம் கோரியுள்ளார்.
இந்நிலையில் பணத்தை தவற விட்ட பெண்ணை தேடி கண்டுபிடித்து அந்தப் பகுதி பிரதேச சபை அதிகாரிகள் முன்னிலையில் கை பை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அவசர பணத்தேவைக்காக பணத்தை கை பையில் வைத்திருந்தபோதே தனது கை பை தவறவிடப்பட்டதாக குறித்த பெண் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவின் நேர்மையான செயற்பாட்டினை பலரும் பாராட்டி வரும் நிலையில், அந்த பகுதியிலுள்ள நலன்புரிச் சங்கமொன்று குறித்து சிறுமியை கெளரவித்திருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment