லெஸ்டர் இலங்கை முஸ்லிம் யூத் இப்தார் நிகழ்வில், கூறப்பட்ட சில முக்கிய விடயங்கள் (படங்கள்)
இந்நிகழ்வில் சுமார் 140 இளைய சமூகத்தினர் கலந்து சிறப்பித்திருந்தனர். 6:30 மணிக்கு கிறாஅத்துடன் ஆரம்பமான நிகழ்வில் அதிபர் பரீட் மியா (Forid Miah) விஷேட அதீதியாக கலந்து , கலந்துரையாடலுடன், கூடிய சொற்பொழிவாக புனித குர்ஆனின் அற்புதங்கள் , அவை ஏன் அற்புதமாகின்றன அவைகளால் மனித குலத்தில் நிகழ்கின்ற மாற்றங்கள் அதன் மூலம் நாம் பெற வேண்டிய படிப்பினைகள் என பல்வேறு குறுந்தலைப்புகளின் ஊடாக குர்ஆனே எமக்கு போதுமான வழிகாட்டி என கோடிட்டு காட்டினார்.
SLMS-UK ( SriLanka Muslim Society) அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த முயற்சிக்கு, அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்கி இருந்ததோடு, சிலர் அனுசரனையும் வழங்கி இருந்தனர்.
ஐக்கிய இராச்சியத்தில் உள்ள பல இஸ்லாமிய அறிஞர்களின் ஆய்வுகளின் படி ஐக்கிய இராச்சியத்தில் இஸ்லாமிய மார்க்கத்தினால் பலர் ஈர்க்கப்பட்டு தம்மை இணைத்துக் கொள்ளும் வேளையிலும் , இளைஞர்களை மார்க்கத்தை விட்டு தூரமாக்கும் பல முயற்சிகளும் இடம்பெற்று வருகின்றன என்பதே அவர்களின் ஆய்வின் முடிவாகிறது.
இவ்வாறான ஓர் காலகட்டத்தில் இளைஞர், யுவதிகளை மார்க்கத்தின் பாலும், சமூகத்தின் பாலும் உள்வாங்க பட வேண்டிய கட்டாயத்தை பெற்றோர்களும் மற்ற தரப்பினர்களும் உணர்ந்து இவ்வாறான பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்றும் லெஸ்டர் மாநகரம் இங்கிலாந்தின் மத்திய பகுதியில் (Midlands) அமைந்துள்ளது. அண்மைய சனத்தொகை கணக்கெடுப்பின் படி 366000 மக்கள் தொகையுள்ள பிரதேசத்தில் 18.7 வீதம் முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.
இதில் 450 க்கும் மேற்பட்ட இலங்கை முஸ்லிம் குடும்பங்கள் மூன்று முழுநேர பள்ளிவாசல்களும், இரண்டு சென்டர்களும் அடங்கலாக ஐந்து வணக்கஸ்தலங்களை நிர்வகித்து வருகின்றமை குறிப்பிட பட வேண்டிய விடயமாகும் .
இது தவிர ஏளானமான மஸ்ஜித்களும், அரபு மத்ரஸாக்களும், இஸ்லாமிய பாடசாலைகளும் வேறு பல தொண்டு நிறுவனங்களும் இயங்கி வருவது லெஸ்டருக்கே உரித்தான சிறப்பம்சமாகும். இவைகளால் கவரப்பட்டு இன்னும் பல இஸ்லாமிய உறவுகள் லெஸ்டரை வாழ்விடமாக மாற்றி வருகின்றனர்.
Post a Comment