சத்திரசிகிச்சைகள் நாளைமுதல் ஆரம்பம்
கொழும்பில் உள்ள தேசிய கண் வைத்தியசாலை நாளை (24) முதல் பூரண செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளது என்றும் இடைநிறுத்தப்பட்டிருந்த சத்திரசிகிச்சைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கண் சொட்டு மருந்தைப் பயன்படுத்தியதைத் தொடர்ந்து சில நோயாளிகளில் சிக்கல்கள் காணப்பட்டதை அடுத்து, கடந்த வாரத்தில் சத்திர சிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டன.
தேசிய கண் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட ஆறு நோயாளர்களுக்கு தொற்றுகள் ஏற்பட்டதாக அடையாளம் காணப்பட்டது.
Post a Comment