Header Ads



என்ன ஒரு பண்பாடுமிக்க சமுதாயமாக, இருந்திருக்கிறது இஸ்லாமிய சமுதாயம்...?


உதுமானிய கிலாபத் ஆட்சிகாலத்தில் வீட்டின் நுழைவாயில் கதவின் ஒரு பக்கத்தில் மெல்லிய இரும்பு வளையமும் மறுபக்கம் தடித்த இரும்பு வளையமும் இணைக்கப்பட்டிருக்குமாம்.


வீட்டிற்கு பெண்கள் வந்தால் மெல்லிய வளையத்தைத் கதவில் அடிப்பார்கள்,

 

வந்திருப்பவர் பெண் என அறிந்து வீட்டினுள்ளே இருக்கும் பெண்கள் கதவைத்திறப்பார்கள்.


ஆண்கள் வந்தால், தடித்த இரும்புவளையத்தால் தட்டுவார்கள். 


ஆண்கள் வந்து கதவைத் திறப்பார்கள். 


அதேபோன்று வீட்டில் முதியோர்களோ, நோயாளிகளோ


இருந்தால் வீட்டு வாசலில் சிவப்பு நிற ரோஜாவை தொங்கவிடுவார்களாம்.


அவ்வீட்டின் வழியே, பொருட்களை கூவி விற்கும் வியாபாரிக்ள், பாட்டுப்பாடிச் செல்லும் நாடோடிகள், வாசலில் விளையாடும் குழந்தைகள், உரக்கப் பேசிய படியே செல்வோர் இவ்வீட்டினுள் முதியவர்கள், நோயாளிகள் இருப்பதை உணர்ந்து  மௌனமாக செல்வார்களாம்.


  என்ன ஒரு பண்பாடு மிக்க சமுதாயமாக இருந்திருக்கிறது இஸ்லாமிய சமுதாயம்.


- அரபு இணையதளத்திலிருந்து -


இஸ்மாயீல்நாஜிபாஜில்மன்பயீ

No comments

Powered by Blogger.