விபத்தில் தூக்கி வீசப்பட்ட பெண்
ஊரெழு பர்வதவர்த்தனி மனோன்மணி அம்மன் ஆலயத்திற்கு அருகில் பலாலி வீதியில் நேற்று முன்தினம் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 73 வயதான உமாதேவி கனகநாயகம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் உரும்பிராய் வடக்கு கற்பக விநாயகர் கோவில் கிளை வீதியை வசிப்பிடமாகக் கொண்டவர் என தெரிய வந்துள்ளது.
குறித்த பெண்மணி துவிச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த போது ஊரெழு பர்வதவர்த்தனி மனோன்மணி அம்மன் ஆலயத்திற்கு அருகில் பலாலி வீதியில் மஞ்சள் கடவையின் எல்லையில் பின்னால் வேகமாக வந்த பட்டா ரக வாகனம் குறித்த பெண்ணைச் சடுதியாக மோதித் தள்ளியது.
சம்பவத்தில் வயோதிபப் பெண் தூக்கி வீசப்பட்டுத் தலையில் படுகாயமடைந்தார்.
இந்நிலையில் சுயநினைவற்று ஆபத்தான நிலையிலிருந்த குறித்த பெண் யாழ். போதனா மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு 12 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
Post a Comment