ராஜபக்ஷ கட்டிய கோபுரம் - தாமரையை தூக்கப் போகிறாரா ரணில்...?
கொழும்பு தாமரை கோபுரத்தின் பெயரிலிருந்து “தாமரை” பகுதியை நீக்கி, அதன் பெயரை “கொழும்பு கோபுரம்” என மாற்றுவதற்கான பிரேரணை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயரமான கோபுரத்திற்கு தாமரை கோபுரம் என்ற பெயர் ஏற்புடையதல்ல என்ற கருத்தும் இந்த பெயரை மாற்றக் காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த கோபுரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கட்டப்பட்டது.
Post a Comment