கம்பி எண்ணும் அருண் சித்தார்த்
யாழ். சிவில் சமூக நிலைய தலைவர் அருண் சித்தார்த் உள்ளிட்ட 5 பேர் விளக்கமறியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது கடந்த 20ஆம் திகதி இரவு அருண் சித்தார்த் தலைமையில் பெண்கள் அடங்கிய 7 பேர் கொண்ட வன்முறை கும்பல் தாக்குதல் மேற்கொண்டு, உரிமையாளர் மீதும் சாணித் தண்ணி ஊற்றி தாக்குதல் மேற்கொண்டனர் என தாக்குதலுக்கு இலக்காகிய உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாண பொலிஸார் அருண் சித்தார்த், அவரது மணைவி உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 06 பேரையும் விசாரணைகளின் பின்னர் யாழ். நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் அவர்களில் பால் ஊட்டும் தாயார் ஒருவருக்கு கடுமையான எச்சரிக்கையுடன் பிணை வழங்கிய நீதிமன்று ஏனைய ஐவரையும் எதிர்வரும் 02ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டது.
அருண் தமிழ் மற்றும் இந்து பயங்கரவாதத்தை எதிற்கும் ஒரு சிறந்த சித்தாந்தவாதி. Jaffna இணையம் இந்த பதிவின் தலைப்பை மாற்றுங்கள். இவர் முஸ்லிம்களுக்கு எதிரானவர் அல்ல. இவரின் செயலை விட தமிழ் பயங்கரவாதம் கொடியது
ReplyDelete