தனிமையில் வாழ்ந்த வயோதிபப் பெண், குளத்திலிருந்து சடலமாக மீட்பு
தனிமையில் வாழ்ந்த வயோதிபப் பெண்ணொருவர் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குளியாப்பிட்டி பிரதேசத்திலுள்ள குளத்தில் இருந்தே குறித்த பெண் நேற்றைய தினம் (07.04.2023) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதே பிரதேசத்தில் வசிந்த வந்த த 71 வயதுடைய பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் கணவர் (வயது 73) கடந்த மாதம் வீட்டில் தூக்கில் தூங்கி தற்கொலை செய்தார் என்றும், அதன்பின்னர் குறித்த பெண் வீட்டில் தனிமையில் வசித்து வந்தார் என்றும் பொலிஸாரின் மேலதிக விசாரணையில் தெரியவந்துள்ளது.
Post a Comment