Header Ads



அல்லாஹ்விடம் ஒப்படையுங்கள், நம்பிக்கை வையுங்கள், அல்லாஹ் காப்பாற்றுவான்


ஷைக்முஹம்மதுஅமீன் ஸன்கீதி (ரஹ்) அவர்கள்  கூறுகிறார்கள்:


பிர்அவ்னும் அவனுடைய கூட்டத்தாரும் மூஸாநபி(அலைஹிஸ்ஸலாம்)அவர்களுக்கும் அவர்களின் சமுதாயத்திற்கும் கடுந் தொல்லைகள் கொடுத்த வேளையில்,


மூஸாநபி சொன்னார்கள்:

فَسَتَذْكُرُوْنَ مَاۤ اَقُوْلُ لَـكُمْ وَاُفَوِّضُ اَمْرِىْۤ اِلَى اللّٰهِ اِنَّ اللّٰهَ بَصِيْرٌ بِالْعِبَادِ‏


இன்று உங்களுக்கு நான் சொல்லிக் கொண்டிருப்பதை நீங்கள் நினைத்துப் பார்க்கும் ஒரு நேரம் அதிவிரைவில் வந்துவிடும். 


   நான் என் விவகாரத்தை அல்லாஹ்விடம் ஒப்படைக்கின்றேன். திண்ணமாக, அல்லாஹ் தன் அடிமைகளை கண்காணிப்பவனாக இருக்கின்றான்."


 என பிர்அவ்ன் கூட்டத்தினரின் கொடுமைகளை சகித்துக்கொண்டு பொறுமையாக இருந்ததுடன் அல்லாஹ்வின் மீது தவக்கல் வைத்து அவனிடம் பொருப்பை ஒப்படைத்தார்கள்.


அவர்களின் உறுதியான நம்பிக்கையின் காரணமாக,

فَوَقٰٮهُ اللّٰهُ سَيِّاٰتِ مَا مَكَرُوْا وَحَاقَ بِاٰلِ فِرْعَوْنَ سُوْٓءُ الْعَذَابِ‌‏


இறுதியில், (அந்நம்பிக்கையாளருக்கு எதிராக) அந்த மக்கள் கையாண்ட எல்லாவிதமான மோசமான சூழ்ச்சிகளிலிருந்தும் அல்லாஹ் அவரைக் காப்பாற்றிக் கொண்டான். மேலும், ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களை கொடிய வேதனை சூழ்ந்து கொண்டது. (அல்குர்ஆன் : 40:45)


யார் பொறுமையுடன் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைவைத்து தங்களின்  விவகாரங்களை அவனிடம் ஒப்படைக்கிறார்களோ அவர்களை அல்லாஹ் அனைத்துவகையான சூழ்ச்சிகளிலிருந்தும்  காப்பாற்றுவான்.


எனவே அன்பு சகோதரர்களே! நமக்கெதிராக நடக்கும் சூழ்ச்சிகளைக் கண்டு மனம் தளராதீர்.


 பொறுமை, தொழுகையின் மூலம் அல்லாஹ் விடம் உதவிதேடுங்கள்.


மூஸாநபி(ஸல்) அவர்கள் கூறியதைப் போன்று உபவ்விழு அம்ரீ இலல்லாஹ் இன்னல்லாஹ பஸீரும் இபாத் என்று சொல்லுங்கள்.


அத்துடன் 

ஹஸ்பனல்லாஹு நிஃமல்வகீல்

நிஃமல் மவ்லா,வநிஃமன் நஸீர்

எங்கள் காரியங்கள் அனைத்திற்கும் அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன்.


அவன் பொறுப்பேற்றுகொள்வர்களில் சிறந்தவன், 

அவன் சிறந்த எஜமான், சிறந்த உதவியாளன்.


என்ற வசனங்களையும் சிந்தித்து நம்பிக்கையுடன் ஓதிவாருங்கள்.


உங்கள் மனைவி,குழந்தைகள் மனதில் இந்த வசனங்களைச் சொல்லி நம்பிக்கையை ஊட்டுங்கள்.


நம்மைப் பாதுகாக்க அல்லாஹ் போதுமானவன்


இஸ்மாயீல்நாஜிபாஜில்மன்பயி

No comments

Powered by Blogger.