Header Ads



நீர்கொழும்பு,பெரியமுல்லை சாத்தார் ஆசிரியர் காலமானார்.


- Ismathul Rahuman -


நீர்கொழும்பு அல் ஹிலால் மத்திய கல்லூரியின் முன்னாள் உதவி அதிபர்  சாத்தார் ஆசிரியர்   காலமானார்.


அல் ஹிலால் மத்திய கல்லூரியின் சித்திர ஆசிரியராக கடமையாற்றிய இவர் விளையாட்டு, மற்றும் கலை இலக்கிய விடயங்களில் திறமை காட்டியவர்.பாடசாலையின் உதவி அதிபராகவும் செயல்பட்டார்.  மரணிக்கும் போது இவருக்கு 80 வயது.


 காசிஸ் இஸ்மாயில் எனவும் அழைக்கப்பட்டவர்.


 மூன்று பிள்ளைகளின் தந்தையான இவருக்கு ஒரு மகள் இரு மகன்களும் உள்ளனர். இவரது மூத்த மகன் மொகமட் சியாம் ஆசிரியராக பணியாற்றி தற்போது கேட்டார் நாட்டில் தொழில் புரிந்து வருகிறார். இரண்டாவது மகன் மொகமட் சரூஜ் சமூக சேவையில் அதிக ஈடுபாடுவதுடன் அரசியலில் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போட்டியிட்டவர். மர்ஹும் சத்தார் ஆசிரியரின் மனைவி ஹலீமதுல் ஸொகரா கொட்டராமுல்லையைச் சேர்ந்த ஓய்வுநிலை ஆசிரியையாவர். 


எப்போதும் உற்சாகமாக காணப்படும் இவர் வயது வித்தியாசமின்றி எல்லோரோடும் அன்பாக பழகி வந்தவர். தன் சமூகம் சார்ந்த விடயங்களில் அதிக அக்கறை உடையவர். தனது கருத்தை எப்போதும் வெளிப்படையாக பேசுபவர்.


   நீர்கொழும்பு, பெரியமுல்லை, லாசரஸ் வீதியில் அமைந்துள்ள அன்னாரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ள அன்னாரின் ஜனாஸா இன்று  15 ம் திகதி  இரவு 10:30 மணிக்கு பெரியமுல்லை   முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

No comments

Powered by Blogger.