Header Ads



சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காக தயாரிக்கப்பட்ட விசேட வாகனங்கள்


கடற்கரையோரங்களை அண்டியதாக இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காக தயாரிக்கப்பட்ட  விசேட வாகனங்களை ஜனாதிபதி பார்வையிட்டார்.


கடற்கரையோரங்களை அண்டியதாக இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள்,  பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு ஆட்கடத்தல்களை தடுப்பதற்காக ஐடியல் மோட்டார் நிறுவனத்தினால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 03 விசேட வாகனங்கள் இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டன. 


கடலோர மற்றும் குளம் சார்ந்த பகுதிகள் மற்றும் எந்த கரடுமுரடான நிலப்பரப்பிலும்(Combat All Terrain Vehicle)  கடற்படை நடவடிக்கைகளுக்கு இலகுவாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வாகனங்கள், கொழும்பு மற்றும் மன்னார் கடற்பகுதிகளில் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக எதிர்காலத்தில் பயன்படுத்தப்பட உள்ளன.


தற்போது இலங்கை கடற்படையின்  பொறுப்பில் உள்ள இந்த வாகனங்களின் பயன்பாடுகள்  குறித்து ஜனாதிபதி முன்னிலையில் காண்பிக்கப்பட்டன.


கடற்படையின் பிரதிப் பிரதானியும்  பணிப்பாளர் நாயகமுமான (செயற்பாடுகள்) ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க, பணிப்பாளர் மரைன் கொமடோர் சனத் பிடிகல மற்றும் கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகள், ஐடியல் குழுமத்தின் தலைவர் நலீன் ஜே.வெல்கம ஆகியோர் இந்த நிகழ்வில்  கலந்துகொண்டனர்.


ஜனாதிபதி ஊடகப் பிரிவு

27-04-2023


No comments

Powered by Blogger.