மயில்களையும் ஏற்றுமதி செய்ய வேண்டும், இதனை எதிர்ப்பவர்கள் அரக்கர்கள்
குரங்குகள் மட்டுமன்றி மயில்களும் பயிர்களுக்கு பாரிய சேதத்தை ஏற்படுத்துகின்றன எனவே குரங்குகளை மட்டுமல்ல மயில்களையும் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
சீனாவுக்கு செங் குரங்குகளை ஏற்றுமதி செய்யும் யோசனை குறித்து புத்தாண்டு விழா ஒன்றில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
“சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உட்பட செங் குரங்குகளை ஏற்றுமதி செய்வதை எதிர்க்கும் தரப்பினர், வண்ணாத்திவில்லு, ஆனமடுவ, அனுராதபுரம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று தோட்டங்களுக்கு இந்த குரங்குகள் மற்றும் மயில்களால் ஏற்படும் பாதிப்பினால், விவசாய சமூகம் அனுபவிக்கும் இழப்பையும் காண வேண்டும்“ என்று வலியுறுத்தியுள்ளார்.
“அரசாங்கம் ஏதாவது செய்ய முடிவு செய்யும் போதெல்லாம் எப்போதும் சில அரசியல் தலைவர்களும், அரசாங்க அதிகாரிகளும் அரக்கர்களை உருவாக்குகிறார்கள். இப்போது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அரக்கர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்“ என்றும் தெரிவித்துள்ளார்.
Post a Comment