ஜனாதிபதி குறித்து இஸ்மத் மௌலவி கூறும் விடயமும், அவர் கிளப்பியுள்ள சந்தேகங்களும்
''நாட்டிற்காக, நாட்டு மக்களுக்காக போராட்டம் என்று வரும் போது, அதற்கு நானும் ஒரு சொந்தக்காரன். ஆனால் நாங்கள் போராட்டம் செய்து, ஒரு வருடம் ஆகிறது. ஆனால் இதில் பல பல சந்தேகங்கள் இப்போது வருகின்றன. எங்களோடு தமிழ் பேசக்கூடிய, சிங்கள மொழி பேசக்கூடிய அருட்தந்தையர்கள் இருந்தார்கள். இவர்கள் எல்லோரும் கடைசி வரை எங்களோடு இருந்தார்கள்.
ஆனால் எப்போது ரணில் வந்தாரோ, அன்றிலிருந்து ஒருவரும் வீதியில் இறங்கிப் போராடுவதில்லை. ஒருவரின் பேச்சும் இல்லை. இதில் எனக்கொரு சந்தேகம் வருகிறது. அடுத்தது எல்லோருக்கும் தெரியும், சஹரான் குண்டு வைத்தது. ஆனால் சஹரானை வழிநடத்தியது யார்? அந்த தலைவரை இன்னும் பிடிக்கவில்லை. இது ஒரு சந்தேகமாக இருக்கிறது.
போராட்டத்தில் பங்கு பற்றிய ஒவ்வொருவரும் தலைவர்கள்தான். கோட்டாபய ராஜபக்ஷவை விரட்டியதன் பின்னர், நல்லவொருவரை தலைவராக எடுக்க வேண்டும். நாட்டிற்கு நல்லதொரு ஜனாதிபதி வர வேண்டும் என்று எண்ணினோம். ஆனால் வரவில்லை. நாடாளுமன்றத்திற்குள் இருந்த ராஜபக்ஷ குடும்பம், இவரை ஜனாதிபதியாக தெரிவு செய்தது. ஐ.எம்.எஃப் ஆக இருக்கட்டும், வீதி முழுவதும் தங்கமாக இருக்கட்டும். அதில் வேலையில்லை. மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் வர வேண்டும்.
இது ஜனநாயக நாடு. நாங்கள் முன்வைத்த ஒரு கோரிக்கையும் இன்னும் நிறைவேறவில்லை. அவர்களின் கோரிக்கை மாத்திரமே நிறைவேறியுள்ளது. இன்னும் ராஜபக்ஷதான். நான் ரணிலை ஜனாதிபதியாக ஏற்றுக்கொள்ளவில்லை. வாக்கெடுப்பில் வரவேண்டும். இன்று வரை ஒரு கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை" என போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்மத் மௌலவி தெரிவிக்கிறார்.
ரஞ்சன் அருண் பிரசாத்
பிபிசி தமிழ் செய்தியாளர்
அரகலய நல்ல எண்ணத்துடன் அவர்களுடைய பணியை ஆரம்பித்தார்கள். ஆனால் காலப்போக்கில் அதன் பாதை சற்று மாறியபோதிலும் அவர்களின் இலக்கு மாறவில்லை. ஆனால் அவர்கள் உடனடியாகச் செய்ய வேண்டியது ஒரு சுதந்திரமான கட்சியை ஸ்தாபித்து அதனை உரிய முறையில் தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்து அவர்களின் பிரதிநிதிகளை நாடு முழுவதும் நியமனம் செய்து நாட்டின் அனைத்து மாகாணங்கள், மாவட்டங்களிலும் அவர்களின் பிரதிநிதிகளை சுதந்திரமாக தேர்தலில் போட்டியிட வேண்டும். அவர்களுடைய இலக்ைகயும் நோக்கத்தையும் நாட்டை முன்னேற்ற அவர்களின் திட்டத்தையும் நாட்டு மக்களுக்குச் சரியாக முன்வைத்து அவர்கள் தேர்தலில் போட்டியிட்டால் நிச்சியம் அவர்கள் வெற்றி பெறுவாரகள். பெரும்பாலான வாக்குகளைப் பெற்று அவர்கள் வெற்றியடைந்தால் அரசாங்கத்தை மாற்றும் அதிகார பலம் அவர்களுடைய கைக்கு வரும், அப்போது அவர்களுடைய இலக்கை முன்னெடுக்கும் கட்சிகளுடன் அல்லது சுதந்திரமாக போட்டியிட்டு அரசாங்கத்தை அமைக்கலாம். இது தான் தற்போது இருக்கும் ஒரே தெரிவு. அதற்கு தற்போது கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்தி அவர்கள் அவர்களுடைய இலக்ைக முன்வைத்து செயல்படலாம்.
ReplyDelete