Header Ads



மது வாங்கித் தராததால், சமையல் செய்ய மறுத்த மனைவி - கணவன் செய்த காரியம்


கும்முடிப்பூண்டி அருகே இளம்பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தனக்கு மது வாங்கித்தரவில்லை எனக்கூறி தகராறில் ஈடுபட்டதால் கொலை செய்ததாக கணவர் வாக்குமூலம் அளித்துள்ளார். 


திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு அருகே கரடிபுத்தூரில் உள்ள தனியார் மாந்தோப்பு ஒன்றில் லட்சுமி என்பவர் கொன்று புதைக்கப்பட்டது 27ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. 


இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அவரது கணவர் தர்மய்யாவை, ஆந்திராவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.


விசாரணையில், லட்சுமியும் தர்மய்யாவும் இணைந்து மது குடிக்கும் பழக்கம் இருந்ததாகவும், கடந்த 22ஆம் தேதி லட்சுமிக்கு மது வாங்கித் தராததால், ஆத்திரத்தில் அடுத்தநாள் சமையல் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார். 


இதனால், சண்டை போட்ட போது, பூச்சி மருந்து குடித்துவிட்டதாக கூறியதாகவும், அடிக்கடி பூச்சி மருந்து குடித்து விட்டு பிரச்சினை செய்ததால் ஆத்திரத்தில் மண்வெட்டியாக் தாக்கி கொலை செய்து புதைத்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து தர்மய்யாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், புழல் சிறையில் அடைத்தனர்.

No comments

Powered by Blogger.