Header Ads



வாடகைக்கு வீடு தேடிச்சென்ற குழு செய்த காரியம்


- கனகராசா சரவணன் -


களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நேற்று வீடு வாடகைக்கு தேவை என வீடு ஒன்றிற்குள் உள்நுழைந்த  3 பேர் கொண்ட கொள்ளையர்கள் அங்கு தனிமையில் இருந்த பெண்னை அடித்து தாக்கிவிட்டு, அவரிடமிருந்த தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.


சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.


இது பற்றி மேலும் தெரியவருவதாவது,


ஒந்தாச்சிமட பிரதேசத்தில் சம்பவதினமான பிற்பகல் 2 மணிக்கு வீட்டில் தனியாக இருந்த பெணிணடம்,  வீடு ஒன்று வாடகைக்கு தேவை எனக் கேட்டு அங்கு 3 இளைஞர்கள் சென்று அந்த பெண்ணிடம் கதை கொடுத்துக் கொண்டனர்.


இதனையடுத்து திடீரென பெண் மீது தாக்குதலை நடத்திவிட்டு அவரின் கழுத்தில் இருந்த சங்கிலி மற்றும் கையில் இருந்த காப்பு என்பவற்றை கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.


இந்த நிலையில் தாக்குதலில் படுகாயமடைந்த பெண்ணை அயலவர்கள் மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்ததுடன் இந்த கொள்ளைச் சம்பவத்தையடுத்து  அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.