Header Ads



குரங்குகளை அனுப்புவதற்கான ஆவணங்கள் வந்தன


சீனாவிலுள்ள மிருகக்காட்சிசாலைகளிற்கு இலங்கை குரங்குகளை ஏற்றுமதி செய்வதற்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் சீன நிறுவனம் ஒன்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளித்துள்ளது.


முதலில் 500 குரங்குகளை வழங்குமாறு விவசாய அமைச்சிடம் கோரியிருந்த போதிலும், குறித்த நிறுவனத்தினால் தற்போது 1500 குரங்குகளை வழங்குமாறு கோரிக்கை விடுகப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


அதேசமயம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 100,000 குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.


விவசாய அமைச்சர் சீன நிறுவனத்தின் முன்மொழிவை அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பார் மற்றும் பிரேரணையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராய அமைச்சரவை உபகுழு நியமிக்கப்படவுள்ளது.


மேலும் இந்த அமைச்சரவை உபகுழு வழங்கிய இறுதித் தீர்மானத்தின் அடிப்படையில் குரங்குகளை ஏற்றுமதி செய்வதற்கான பிரேரணை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.


No comments

Powered by Blogger.