Header Ads



"பசில் ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக, தெரிவு செய்வதில் தவறில்லை"

 
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, தனது ஜனாதிபதி வேட்பாளர் பெயரை சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்குப் பின்னர் அறிவிக்க தயாராகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.


நாட்டிலுள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க உதவக்கூடிய சிறந்த மற்றும் நிலையான வேலைத்திட்டத்தை மக்களுக்கு முன்வைக்க வேண்டும்.


அத்தகைய திட்டத்தை நாட்டுக்கு முன்வைக்கக்கூடிய ஒரே கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மட்டுமே என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்தநிலையில் எதிர்வரும் புத்தாண்டின் பின்னர் தமது அரசியல் பிரச்சாரத்தை வலுப்படுத்தவுள்ளதாகவும், புத்தாண்டின் பின்னர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளவரை அறிவிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த, பண்டார, அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை தெரிவு செய்வதில் தவறில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

1 comment:

  1. ஆம், மிஸ்டர் கபுடாஸை சனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நியமிப்பதில் தவறில்லை. ஏனெனில் இலங்கை போன்ற பெரும்பான்மையினர் முட்டாள்களாக இருக்கும் காலமெல்லாம் அந்த அரசியல் விளையாட்டைத் தொடரலாம். பொது வியாபாரத்தில் ஓரளவு நியாயம் நடைபெற்று வரும் போது அந்த வியாபாரத்துடன் தொடர்புடைய அத்தனை பேரிடமும் கப்பம் பலாத்காரமாக வாங்கி வியாபரத்தை வெறும் கொள்ளைக்காரன், கள்வர்களின் ஒரே தளமாக மாற்றி அவருடைய அடிவருடிக்கு சீனி இறக்குமதி மூலம் பதினெட்டாயிரம் கோடி வரியாக அறவிடப்பட வேண்டிய தொகையை சூறையாடி கமிசன் அடித்து, விவசாய அபிவிருத்தி என்ற பெயரில் இந்த நாட்டுக்குப் பொருத்தமில்லாத மாடுகள்நூற்றுக்கணக்கில் இறக்குமதி செய்து திறைசேரியிலிருந்து கோடான கோடி டொலர்களைக்களவாடி, பொருளாதாரத்தை நிதி அமைச்சர் என்ற பெயரில் படுகுழியில் தள்ளி ஓரிரு நாட்களில் பதினைந்து இலட்சம் மக்களை வறுமைக்கோட்டுக்கீழ் தள்ளி, சமூர்த்தி அமைச்சின் வங்கிக் கணக்கிலிருந்த பணம் நாலாயிரம் கோடி பணத்தை சுருட்டிக் கொண்டு தாய் நாடான அமெரிக்கா பறந்த இந்த மாபெரும் கொள்ளைக்காரனை சனாதிபதியாக இந்த நாட்டு மக்கள் நியமிக்க தெரிவு செய்தால் இந்த நாட்டு மக்களை நோக்கி சோமாலியா, அங்கோலா, மட்டுமல்ல உலகில் வாழும் நியாய சிந்தனை கொண்ட அத்தனை மக்களும் இந்த நாட்டு மக்கள் மீது காறித்துப்புவார்கள். அதை எதிர்பார்க்க இந்த நாட்டு மக்கள் தயாராக இருப்பின் அது அவர்களின் தெரிவு. அவ்வளவுதான்.

    ReplyDelete

Powered by Blogger.