Header Ads



கொழும்பில் உள்ள வைத்தியசாலைகள் எதிர்நோக்கும் புது நெருக்கடி


கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பாதுகாவலர்கள் இன்றி அதிகளவான நோயாளர்கள் தங்கியிருப்பதால், நாளாந்த வைத்தியசாலை நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.


தினமும் சுமார் ஐந்து பேர் குணமடைந்து வைத்தியசாலையில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதனால், மருத்துவமனை நிர்வாகத்தால் மேலதிக செலவு செய்ய வேண்டி ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷன் பெல்லென தெரிவித்தார்.


நோயாளர் காவு வண்டியின் ஊடாக பலர் சிகிச்சைகளுக்காக அழைத்து வரப்படுகின்றனர். அவர்கள் சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்திருப்பினும், பொறுப்பேற்க எவரும் வருவதில்லை. அவர்களில் பெரும்பாலானோர் வயோதிபர்களாவர். குணமடைந்த சிலருக்கு வீடு செல்வதற்கான வழி தெரியவில்லை. அவ்வாறு வைத்தியசாலையில் உறவினர்கள் எவரேனும் தங்கியிருப்பின் அவர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்க வேண்டியது மருத்துவமனையின் பொறுப்பாகும். குணமடைந்ததன் பின்னர் அது தொடர்பான பொறுப்புக்கூறலை ஏற்க வேண்டியது சமூக பாதுகாப்பு அமைச்சுக்குரியதாகும் என அவர் தெரிவித்துள்ளார்.


கொழும்பு தேசிய வைத்தியசாலை, கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை உட்பட மேலும் பல முக்கிய வைத்தியசாலைகளிலும் இந்த நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.