பிரிந்து சென்று தனியே, பயணித்த சமுத்திராதேவி
காலியில் இருந்து மருதானை நோக்கி பயணித்த சமுத்திராதேவி ரயிலின் இயந்திரம் வடக்கு களுத்துறை பகுதியில் பிரிந்து தனியே செல்லும் காட்சி சிசிரிவி கமெராக்களில் பதிவாகியுள்ளது.
இன்று (09) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அப்போது ரயிலின் இயந்திரம் ரயிலில் இருந்து பிரிந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தனியே பயணித்துள்ளதாக கூறப்படுகிறது.
15 நிமிடங்களுக்குப் பின்னர் ரயில் மீண்டும் சரிசெய்யப்பட்டு மருதானை நோக்கி இயக்கப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
Post a Comment