மக்களைக் கஷ்டப்படுத்தி, அடிமைப்படுத்தி, கொடுமைப்படுத்தி ஆட்சியைத் தொடரலாம் என தப்புக்கணக்குப் போட்டுள்ளது
மக்களைக் கஷ்டப்படுத்தியும் அடிமைப்படுத்தியும் கொடுமைப்படுத்தியும் ஆட்சியைத் தொடரலாம் என அரசாங்கம் தப்புக்கணக்குப்போட்டுள்ளது என சுதந்திர மக்கள் சபையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
ஒரு பக்கம் பொருட்களின் விலைகளை அதிகரித்த அரசாங்கம் மறுபக்கம் வரிகளையும் உயர்த்தியது.
இப்போது, தமக்கு எதிராகப் பொங்கியெழுவோரை அடக்குவதற்காகப் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற கொடிய சட்டத்தையும் நிறைவேற்ற அரசாங்கம் படாதபாடுபடுகின்றது.
அரசின் இந்த அராஜக நடவடிக்கைகளுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். இதில் இன, மத, கட்சி வேறுபாடு இருக்கக்கூடாது. இப்படியான வேறுபாடுகளால்தான் நாடு பின்னோக்கிப் பயணித்தது.
இன, மத, கட்சி வேறுபாடுகளை மறந்து நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போல் ஓரணியில் நிற்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment